பள்ளிக்கல்வி அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகள் ஆசிரியர்கள் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித்தேர்வுகள் எழுதிட முன் அனுமதி வழங்குதல் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலேயே வழங்கிட அறிவுரைகள் வழங்குதல்-சார்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 2, 2023

பள்ளிக்கல்வி அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகள் ஆசிரியர்கள் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித்தேர்வுகள் எழுதிட முன் அனுமதி வழங்குதல் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலேயே வழங்கிட அறிவுரைகள் வழங்குதல்-சார்பு

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையாது செயல்முறைகள்,சென்னை - நாள் 02.01.2023

பள்ளிக்கல்வி அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகள் ஆசிரியர்கள் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித்தேர்வுகள் எழுதிட முன் அனுமதி வழங்குதல் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலேயே வழங்கிட அறிவுரைகள் வழங்குதல்-சார்பு

பார்வை 1)அரசாணை (நிலை) எண். 151, பள்ளிக்கல்வித்துறை, நாள் 09.09.2022

பார்வை (1)ல் காண் அரசாணை வாயிலாக பள்ளிக் கல்வித்துறையில் மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு நிர்வாக மறு கட்டமைப்பு குறித்தும் திருத்தி அமைக்கப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் இதர தேர்வாணையங்கள் நடத்தும் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள முன் அனுமதி கோரும்போது முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்து பள்ளிக் கல்வி ஆணையரகத்திற்கு பரிந்துரை செய்து அனுப்புவதில் காலதாமதம் ஏற்படுவது கவனத்திற்கு தெரிய வருகிறது. அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் இதர தேர்வாணையங்கள் நடத்தும் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள உரிய கால அவகாசத்திற்குள் அனுமதி வழங்குவதற்கு ஏதுவாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலேயே உரிய முன் அனுமதி வழங்கிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.