15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை இனி இயக்க முடியாது: மத்திய அரசு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, January 19, 2023

15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை இனி இயக்க முடியாது: மத்திய அரசு

15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை இனி இயக்க முடியாது: மத்திய அரசு 15-year-old government vehicles no longer plyable: Central Govt

பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வாகனங்களை இனி இயக்க முடியாது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசு, யூனியன் பிரதேசங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான அல்லது கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பு, மாநகராட்சி அல்லது நகராட்சி அல்லது பஞ்சாயத்துகளில் உள்ள வாகனங்கள் இனி இயக்க முடியாது.

மேற்கண்ட அலுவலகங்களில் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் 2023 ஏப்ரல் முதல் அழிக்கப்படும் என்றும், மேலும், அவற்றிற்குரிய பதிவுகளும் புதுப்பிக்கப்படாது என மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அறிவிப்பை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த புதிய விதி 2023 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.