Thai Amavasai 2023: வருகிறது தை அமாவாசை: என்ன நேரத்தில் தர்ப்பணம் அளிக்க வேண்டும்? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 18, 2023

Thai Amavasai 2023: வருகிறது தை அமாவாசை: என்ன நேரத்தில் தர்ப்பணம் அளிக்க வேண்டும்?



Thai Amavasai 2023: வருகிறது தை அமாவாசை: என்ன நேரத்தில் தர்ப்பணம் அளிக்க வேண்டும்? Thai Amavasai 2023: Thai Amavasai is Coming: When to Offer Tarpan?

Thai Amavasai Tharpanam: தை அமாவாசை தினத்தில் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படும்.

2023ம் ஆண்டு பிறந்துள்ள தை மாதத்தில் அடுத்தடுத்து பல முக்கியமான நாட்கள் பிறந்து வருகிறது. தை என்றாலே சிறப்பு மிக்க மாதமாக உள்ளது. இந்த நிலையில், கடந்த 17-ந் தேதிதான் சனிப்பெயர்ச்சி நிகழ்ந்தது. இந்த நிலையில், நாளை மறுநாள் அதாவது வரும் 21-ந் தேதி தை அமாவாசை(Thai Amavasai) தினமாகும். தை அமாவாசை தினமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். தை அமாவாசை:

நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாட்களில் ஒன்றாக ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை, தை அமாவாசை தினங்கள் கருதப்படுகிறது. சிறப்பு மிகுந்த இந்த நாட்களில் நாளை மறுநாள் வரும் தை அமாவாசை தினத்தில் மக்கள் தங்களது முன்னோர்களுக்கு  தர்ப்பணம் செய்வது புண்ணியமாக கருதப்படும்.

தை அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களுக்கு திதி எனப்படும் தர்ப்பணம் அளிப்பதற்கு காலை 6.17 மணி முதல் அன்று நள்ளிரவு அதாவது 22-ந் தேதி அதிகாலை 2.22 மணி வரை உகந்த நேரம் ஆகும். இந்த நேரத்தில்தான் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க வேண்டும். நாம் இந்த தை அமாவாசை நாளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதால் அவர்களது ஆன்மா சாந்தியடையவதாக நம்பப்படுகிறது. தர்ப்பணம்:

இந்த தை அமாவாசை தினத்தில் நாம் கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், புத்தாடைகள் ஆகியவற்றை நாம் தானமாக அளித்தால் மிகவும் நல்லது. இவ்வாறு செய்வதன் மூலமாக நம் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, தை அமாவாசை தினத்தில் ஏழை, எளிவர்களுக்கு தானம் செய்வதன் மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் வந்தடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாளை மறுநாள் வரும் தை அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது போல, ஏழை,எளிய மக்களுக்கு தானம் செய்ய வேண்டியதும் கட்டாயம் ஆகும். தானத்தில் சிறந்த தானமான அன்னதானம் செய்வது மிகவும் நல்லது ஆகும். தை அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் நீராடி காலை முதல் தர்ப்பணம் அளிப்பார்கள். இதனால், நாளை மறுதினம் தர்ப்பணம் அளிக்கும் இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தை அமாவாசை தினத்தில் நமது மூதாதையர்களை நினைவுபடுத்தும் விதமாக தாத்தா, கொள்ளுதாத்தா, எள்ளுதாத்தா, பாட்டன், பூட்டன் என நமது தலைமுறையினரையும் நினைவில் கொள்ள வேண்டும். தங்களது சக்திக்கு ஏற்ப தர்ப்பணம் செய்வது நல்லது ஆகும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.