Chief Minister's Office - Allocation of subjects of the Departments among the Principal Secretary/Secretaries to Chief Minister - Orders issued - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 18, 2023

Chief Minister's Office - Allocation of subjects of the Departments among the Principal Secretary/Secretaries to Chief Minister - Orders issued

Chief Minister's Office - Allocation of subjects of the Departments among the Principal Secretary/Secretaries to Chief Minister - Orders issued

முதலமைச்சர் அலுவலகம் - முதன்மைச் செயலாளர் / முதலமைச்சரின் செயலாளர்கள் மத்தியில் துறைகளின் பாடங்களை ஒதுக்கீடு செய்தல் - ஆணைகள் வெளியிடப்பட்டது

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான அரசின் முதன்மைச் செயலாளராக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். அதையடுத்து, கூடுதல் பொறுப்பாக அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலராகவும் நியமிக்கப்பட்டார்.

துறைகள்:

அதன்படி முதல்வரின் முதல் செயலாளர் உதயசந்திரன் ஐஏஎஸ் பொது நிர்வாகம், உள்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, தொழில் துறை, சிறப்பு திட்டங்கள் செயல்பாடு, தொழில்நுட்பத்துறை, திட்டம் மற்றும் இந்து அறநிலையத்துறை போன்ற முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டன.

இதையடுத்து, தற்போது கூடுதலாக மேலும் 3 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

1.சுற்றுச்சூழல் - பருவநிலை மாற்றம் மற்றும் வனம்,

2.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மேம்பாடு,

3.சுற்றுலா - கலாச்சாரம்

உதயச்சந்திரன் மோசடிகளைத் தடுக்க முயன்றது மட்டுமின்றி, டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகளை எளிமையாகவும் இணையவழியில் நவீனமாகவும் மாற்றினார். காலத்துக்கேற்ப டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டத்தை மாற்றியமைத்ததிலும் அவரின் பங்கு முதன்மையானது.

இந்நிலையில், அவரது செயல்பாட்டிற்கு ஏற்ப தற்போது அவருக்கு கூடுதலாக 3 பொறுப்புகளை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.