ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO) Press Release - நாள்: 18.01.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 18, 2023

ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO) Press Release - நாள்: 18.01.2023

ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO)

(Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations)

நாள்: 18.01.2023

பேரன்புடையீர், வணக்கம்.

08.01.2023 அன்று மதுரையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தொடக்கக்கல்வித்துறை சார்ந்த ஆசிரியர் இயக்கங்களின் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை முடிவெடுத்து அறிவிப்பதற்கான கூட்டம் கீழ்க்கண்டவாறு நடைபெற உள்ளது.

நாள்: 24.01.2023 செவ்வாய்க்கிழமை

நேரம்: மாலை 03.00 மணி

இடம்:

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாநில அலுவலகம், 41, முக்தா ருன்னிசா பேகம் தெரு, எல்லீஸ் சாலை, சென்னை-600 002.

ஜாக்டோ ஜியோவில் இணைந்துள்ள தொடக்கக்கல்வித்துறை சார்ந்த - ஆசிரியர் இயக்கங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் உரிய நேரத்தில் பங்கேற்று நன் முடிவாற்றிட அன்புடன் அழைக்கின்றோம்.

அன்புடன்

மாநில ஒருங்கிணைப்பாளர்களுக்காக

[அ.வின்சென்ட்பால்ராஜ்)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.