போகி பண்டிகை வழிபடும் முறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 13, 2023

போகி பண்டிகை வழிபடும் முறை



2023 ம் ஆண்டில் போகி பண்டிகையானது ஜனவரி 14 ம் தேதி சனிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் இந்த வழிபாட்டை துவங்கலாம்.

பூஜை அறையில் இலை போட்டு, பச்சரிசி சாதத்தை உப்பு சேர்க்காமல் குலைவாக வடித்து, ஒரு பாத்திரத்தில் வைத்து, அதன் அச்சு வடிவத்தில் இலையில் சாதத்தை வைக்க வேண்டும். அந்த சாதத்திற்கு நடுவில் ஒரு சிறிய குழி அமைத்து, அதில் தயிர் விட வேண்டும்.

குழிக்கு மேலாக ஒரு வாழைப்பழத்தை 3 பாகங்களாக நறுக்கி வைக்க வேண்டும். அதே போல் 3 அச்சு வெல்ல துண்டுகளை எடுத்து, ஒரு வாழைப்பழ துண்டு, ஒரு அச்சு வெல்லம் என வைக்க வேண்டும். இதோடு வெற்றிலை, பாக்கு, பழம், துள்ளு மாவு வைத்து படைக்க வேண்டும். துள்ளு மாவு என்பது அரிசியை தண்ணீரில் ஊற வைத்து, தண்ணீரை வடித்து விட்டு, அரிசியை உலற வைத்து, திரித்துக் கொள்ள வேண்டும். அதோடு நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து வைப்பது. படையல் இட்டு, "எங்கள் வீட்டில் நிரந்தரமாக இருந்து, காவல் புரிந்து, அருள் செய்து காக்க வேண்டும்" என வீட்டு தெய்வம் அல்லது குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும். வழிபாட்டை முடித்த பிறகு படையலாக வைத்த சாதத்தை பிரசாதமாக சாப்பிடலாம்.

முடியாதவர்கள் வெறும் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் மட்டும் வைத்து வழிபடலாம். பெண் தெய்வமாக இருந்தால், ஒரு சொம்பில் தண்ணீர் வைத்து அதில் சிறிது மஞ்சள் தூள், வேப்பிலை போட்டு வைத்து வழிபடலாம். போகி பண்டிகை வழிபாட்டை மாலை விளக்கு வைத்த பிறகு இரவு வரை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.