ஒரு நாள் ஊராட்சி மன்றத் தலைவர் ; ஐந்தாம் வகுப்பு மாணவி பதவியேற்பு One day Panchayat Council President; Class 5 student swearing in
அருங்குன்றம் ஊராட்சியில் பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒரு நாள் ஊராட்சி மன்ற தலைவராக ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவி பதவி ஏற்றுக் கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் மானாமதியை அடுத்த அருங்குன்றம் ஊராட்சியில் பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவ மாணவிகள் யாராயிருந்தாலும் ஒரு நாள் ஊராட்சி மன்ற தலைவர் பதவி வகிக்கலாம் என கோரிக்கை விடுத்திருந்தார். அதன் அடிப்படையில் ஐந்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி செல்வி நேத்ரா, இரண்டாம் மதிப்பெண் எடுத்த செல்வி ஸ்ரீ பிரியதர்ஷினி ஆகியோர் இன்று ஒருநாள் முழவதும் ஊராட்சி மன்றத் தலைவராக மற்றும் துணைத் தலைவராக மேள தாளங்கள் முழங்க வரவேற்பு வழங்கி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஒரு நாள் ஊராட்சி மன்ற தலைவராக பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தி பதவி ஏற்று கொண்டனர்
பின்னர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் தேசிய கொடியினை ஏற்றி தேசியத் தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஊராட்சியில் புதிதாக அமைக்க உள்ள கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்கள். இன்று ஒரு நாளில் பதவியேற்ற பின் தேசியக் கொடியை ஏற்றுவதிலிருந்து கிராமசபைக் கூட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் இவர் தலைவராகவே செயல்பட இருப்பதால் ஊராட்சி பொதுமக்கள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.