6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, January 1, 2023

6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

Intermediate teachers, who had been on hunger strike for 6 days, called off their protest - 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்



சென்னையில் கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளது. இந்த ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.



இந்த முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா்கள், தங்களது குடும்பத்துடன், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



பள்ளிக்கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து ஆசிரியர்களின் போராட்டம் 6ஆவது நாளாக இன்றும் தொடர்ந்தது.



இந்த நிலையில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.