தொடக்க கல்வித்துறை சார்பில் ரூ.240 கோடி மதிப்பில் பள்ளி கட்டுமான பணிகள்: முதல்வர் அடிக்கல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, January 26, 2023

தொடக்க கல்வித்துறை சார்பில் ரூ.240 கோடி மதிப்பில் பள்ளி கட்டுமான பணிகள்: முதல்வர் அடிக்கல்



தொடக்க கல்வித்துறை சார்பில் ரூ.240 கோடி மதிப்பில் பள்ளி கட்டுமான பணிகள்: முதல்வர் அடிக்கல் School construction works worth Rs.240 crore on behalf of the Primary Education Department: Chief Minister Atikal

தொடக்க கல்வித்துறை சார்பில் ரூ.240 கோடி மதிப்பில் பள்ளி கட்டுமான பணிகள்: முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்

தொடக்கக் கல்வித்துறைக்காக ரூ.240 கோடி மதிப்பில், புதிய பள்ளிக் கட்டிடங்களை கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்த வாரம் தொடங்கி வைக்க உள்ளார். தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பழைய கட்டிடங்களை மாற்றி புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், தொடக்க கல்வி வராலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான கட்டிடங்கள் கட்டுவதற்காக ரூ. 800 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்து இருந்தார். அதைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை வெளியிட்ட அரசாணையின் படி முதற்கட்டமாக ரூ. 240 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான கட்டிடங்கள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்க இருக்கிறது. இதன்படி தமிழகத்தில் 185 பள்ளிகள் கட்டும் பணி தொடங்கும். அடிக்கல் நாட்டும் விழா பிப்ரவரி 2ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடக்க இருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த பள்ளியில் அடிக்கல் நாட்டும் அதே நேரத்தில் மேற்கண்ட 185 பள்ளிகளிலும் காணொளி மூலம் அடிக்கல் நாட்டும் பணிகள் தொடங்கும். அந்தந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்பார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.