பழைய ஓய்வூதிய திட்ட அமலுக்குப் பிறகும் 60 ஆண்டுகளாக நாடு முன்னேறியுள்ளது - ராஜஸ்தான் முதல்வர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, January 8, 2023

பழைய ஓய்வூதிய திட்ட அமலுக்குப் பிறகும் 60 ஆண்டுகளாக நாடு முன்னேறியுள்ளது - ராஜஸ்தான் முதல்வர்

பழைய ஓய்வூதிய திட்ட அமலுக்குப் பிறகும் 60 ஆண்டுகளாக நாடு முன்னேறியுள்ளது - ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திய பிறகும் 60 ஆண்டுகளாக நாடு முன்னேற்றம் அடைந்துள் ளதால், இனியும் அந்தத் திட்டத்தை தொடரலாம் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது நிதிரீதியாக நொடிந்துபோக வழிவகுக் கும் என்று பொருளாதார வல்லுநர் மான்டேக் சிங் அலுவாலியா அண்மையில் தெரிவித்தார்.

அவரின் கருத்து தொடர்பாக ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கத் தொடங்கிய பிறகும் 60 ஆண்டுகளாக நாடு முன் னேறியுள்ளது. அப்படி இருக்கும்போது இனியும் அந்தத் திட்டத்தை தொடரலாம். ராஜஸ்தானில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு மேற்கொண்டுள்ள முடிவு மனிதாபிமான அடிப்படையிலா னது. ஏனெனில் அரசு ஊழியர்கள் அழுத்தத்துடன் பணியாற்றுகின் றனர். தங்கள் குடும்பத்தின் எதிர்காலம் பாதுகாப்பாக இருப்பதற்கு அவர்கள் முறைகேடாக பணம் ஈட்டும் நிலைக்குத் தள்ளப்படுகின் றனர். பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு அவர்களுக்கு சமூக பாது காப்பு இருக்க வேண்டும். அது அவர்களின் உரிமை.

பழைய ஓய்வூதிய திட்டப் பயன்களை ராணுவத்துக்கு வழங்கும் மத்திய அரசு, எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ திபெத் எல்லை காவல் படை, துணை ராணுவப் படையினருக்கு அந்தப் பயன்களை ஏன் வழங்குவதில்லை? எதற்காக இந்தப் பாகுபாடு கட்டப்படுகிறது என்று கெலாட் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.