சி - டி பிரிவு ஓய்வூதியதாரா்களுக்கு பொங்கல் போனஸ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, January 8, 2023

சி - டி பிரிவு ஓய்வூதியதாரா்களுக்கு பொங்கல் போனஸ்

சி - டி பிரிவு ஓய்வூதியதாரா்களுக்கு பொங்கல் போனஸ்

தமிழக அரசுத் துறைகளில் ‘சி மற்றும் டி’ பிரிவுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசின் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு: ‘சி மற்றும் டி’ பிரிவு பணியாளா்களாக இருந்து ஓய்வு பெற்றவா்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி, போனஸ் தொகை அளிக்கப்படவுள்ளது. அதாவது, மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், முன்னாள் கிராம அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் உள்பட அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசு ஓய்வூதியதாரா்கள் ஆகியோருக்கு பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.500 அளிக்கப்படும்.

மேலும், சிறப்பு ஓய்வூதியம் பெறும் சத்துணவு அமைப்பாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், குறுஅங்கன்வாடி பணியாளா்கள், சத்துணவு சமையலா்கள், சமையல் நூலகா்கள், பெருக்குபவா்கள், துப்புரவுப் பணியாளா்கள், துப்புரவாளா்களுக்கு பொங்கல் போனஸ் தொகையாக ரூ.500 அளிக்கப்படும்.

மேலும், இந்த உத்தரவு தற்காலிக ஓய்வூதியம் பெறும் அனைத்து சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரா்களுக்கும் பொருந்தும். போனஸ் தொகை அறிவிக்கப்பட்ட நாளான கடந்த டிச. 26-ஆம் தேதி அல்லது அதற்குப் பின்னரோ பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளா்களுக்கு போனஸ் கிடைக்காது.

அதேசமயம், சில பிரிவுகளைச் சோ்ந்த ஓய்வூதியதாரா்களுக்கும் போனஸ் தொகை பொருந்தாது. உலமா உதவித் தொகைகள், மாநில சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கான உதவித் தொகை பெறுவோா், புகழ்பெற்ற அறிஞா்கள் மற்றும் சிறந்த மனிதா்களுக்கான சமூக உதவித் தொகைகள் பெறும் சிறப்பு ஓய்வூதியதாரா்கள் ஆகியோருக்கு உத்தரவு பொருந்தாது.

பணியில் இருக்கும் பணியாளா்களுக்குப் பொருந்தக் கூடிய தற்காலிக மிகை ஊதியம், சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் பெறக் கூடிய கருணை அடிப்படையிலான நியமனம் பெற்ற குடும்ப ஓய்வூதியதாரா்கள், ‘ஏ மற்றும் பி’ பிரிவு பதவிகளில் இருந்து ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஓய்வூதியதாரா்கள், அனைத்திந்தியப் பணி அலுவலா்கள், பல்கலைக்கழக மானியக் குழு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள அலுவலா்கள் உள்ளிட்டோருக்கும் பொங்கல் போனஸ் தொகை பொருந்தாது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.