ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, நிலுவைத் தொகையுடன் வழங்க கோரிக்கை! - பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்க - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, December 31, 2022

ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, நிலுவைத் தொகையுடன் வழங்க கோரிக்கை! - பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்க

Teachers demand increase in gratuity for government employees, along with arrears! - ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, நிலுவைத் தொகையுடன் வழங்கிடுக தமிழக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

மாநில மையம் செய்தி அறிக்கை

சம வேலை சம ஊதியத்திற்காக போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்வதற்காக நிதித்துறை செயலாளர் (செலவினம்) தலைமையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளதை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு முழு மனதுடன் வரவேற்கிறது.

அதே நேரத்தில் அந்த குழுவிற்கான கால வரையறை நிர்ணயம் செய்து நியாமான கோரிக்கைகளை முறையாக பரிசீலித்து மேலும் காலம் தாமதம் செய்யாமல், தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதனை உணர்ந்து 2099 இல் நியமனம் செய்யப்பட்ட இடைநிலைஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு தமிழக அரசு விரைவில் தீர்வு காண கேட்டுக்கொள்கிறோம். அகவிலைப்படி உயர்வினை நிலுவைத் தொகையுடன் வழங்கிடுக.

தமிழக அரசின் இன்றைய செய்திக் குறிப்பில், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும் பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை தமிழக அரசு முழுமையாக உணர்ந்து அவர்களின் நலனை பாதுகாத்து வருகிறது.ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு ஜனவரி 2023 முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாபெருந்தொற்றுக்கு பிறகு ஒன்றிய அரசு ஜூலை 2021 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கியது(17% to 31%) தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஜூலை 2021 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு ஏப்ரல் 2022 முதல் வழங்கப்படும் என்று தமிழக அறிவித்தது.ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் இடமிருந்து வந்த கடும் எதிர்ப்பினை அடுத்து மாண்புமிகு தமிழக முதல்வர் சட்டமன்ற பேரவையில் ஜனவரி 2022 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் அறிவித்தார். அந்த அகவிலைப்படி உயர்வில் ஆறு மாத கால அகவிலைப்படி உயர்வு பறிக்கப்பட்டது.

ஒன்றிய அரசு ஜனவரி 2022 முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை வழங்கியது. ஜனவரி 2022 முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலப்படி உயர்வு ஆறு மாத காலம் தாமதமாக 01.07.22 முதல் வழங்கப்பட்டது, இதிலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆறு மாத அகவிலைப்படி உயர்வு உயர்வினை இழந்தார்கள். கடந்த ஜூலை 2022 ல் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வினை வழங்கி உள்ளது. ஜூலை 2022 முதல் தமிழக ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு தற்போது 2023 ஜனவரி மாதம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இது. ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் நலன் காக்கும் அரசு, கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று சொல்கிற தமிழக அரசு மூன்று முறை அகவிலைப்படி அறிவிப்பில் ம் 18 மாத காலாக அகவிலைப்படி உயர்வினை பறித்து இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு நிதி நிலைமை சீராகி இருப்பதை அனைவரும் அறிவர்.மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் அவர்கள் தமிழகத்தின் நிதிநிலைமை மேம்பட்டு இருப்பதாகவும் நிதி வருவாய் கூடியிருப்பதாகவும் கடன் தொகைகள் குறைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் கொரோனா நிதி நெருக்கடியை காரணம் காட்டி ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு பறிக்கப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. திமுக அரசு பதவி ஏற்ற பிறகு ஜூன் 2022 முதல் ஏறக்குறைய 18 மாத கால அகவிலைப்படி உயர்வு பறிக்கப்பட்டு இருப்பது சமூக நீதிக்கு எதிரானது. ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் நலன் காக்க அயராது உழைத்த தலைவர் கலைஞர் அவர்களின் கனவுகளை சிதைப்பதாக உள்ளது.மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்னும் கொரோனா கால நிதிநிலையை காரணம் கூறாமல் தமிழக அரசு நிதி நிலை மேம்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு வர வேண்டிய அகவிலைப்படி உயர்வினை ஜூலை 2022 முதல் நிலுவையுடன் வழங்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறது

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.