ஸ்வச் வித்யாலயா புரஸ்கார் விருதுகள் | நாடு முழுவதும் 39 பள்ளிகள் தேர்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 2, 2022

ஸ்வச் வித்யாலயா புரஸ்கார் விருதுகள் | நாடு முழுவதும் 39 பள்ளிகள் தேர்வு

ஸ்வச் வித்யாலயா புரஸ்கார் விருதுகள் | நாடு முழுவதும் 39 பள்ளிகள் தேர்வு

புதுச்சேரி: ஸ்வச் வித்யாலயா புரஸ்கார் விருதுகளுக்கு நாடு முழுவதும் 39 பள்ளிகள் தேர்வாகியுள்ளன. குஜராத் மாநிலம் 10 பள்ளிகளுடன் முதலிடத்தையும், புதுச்சேரி ஆறு பள்ளிகளுடன் 2ம் இடத்தையும் பிடித்துள்ளன.

நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குடிநீர், தூய்மை, சுகாதாரம் ஆகியவற்றை மையமாக வைத்து தூய்மைப் பள்ளிகளுக்கான ஸ்வச் வித்யாலயா புரஸ்கார் விருதை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை வழங்குகிறது. நடப்பு 2022ம் ஆண்டு இந்தியா முழுவதும் 39 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஸ்வச் வித்யாலயா புரஸ்கருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் 10 பள்ளிகள் விருதுக்கு தேர்வாகி நாட்டில் முதலிடம் பிடித்துள்ளது. அதில் 5 தனியார் பள்ளிகளும், 5 அரசு பள்ளிகளும் அடங்கும்.

2வது இடத்தை புதுச்சேரி பிடித்துள்ளது. மொத்தம் 5 அரசு பள்ளிகளும், 1 தனியார் பள்ளியும் என மொத்தம் 6 பள்ளிகள் ஸ்வச் வித்யாலயா புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியுள்ளன. புதுச்சேரியில் கூனிச்சம்பட்டு பாவேந்தர் அரசு தொடக்கப்பள்ளி நான்காவது ஆண்டாக தொடர்ந்து இவ்விருதினை பெறுகிறது. அதேபோல் புதுச்சேரி குமாரப்பாளையம் அரசு பள்ளி, காரைக்காலில் கண்ணாப்பூர் அரசு தொடக்கப்பள்ளி, காரைக்கால் பூவம் அரசு தொடக்கப்பள்ளி, காரைக்கால் பிள்ளைத்தெருவாசல் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் புதுச்சேரி கொம்பாக்கம் அமலோற்பவம் லூர்துஸ் அகாடெமிக்கும் விருது கிடைத்துள்ளது. குறிப்பாக புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலில் 3 அரசு பள்ளிகள் இவ்விருதினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் தலா மூன்று பள்ளிகளுக்கு விருது பெற்று மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகியவை மூன்றாம் இடங்களை பெறுகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.