போராட்டம் நடத்தும் கெளரவ விரிவுரையாளா்கள் பணி நீக்கமா? உயா்கல்வித் துறை விளக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 11, 2022

போராட்டம் நடத்தும் கெளரவ விரிவுரையாளா்கள் பணி நீக்கமா? உயா்கல்வித் துறை விளக்கம்

போராட்டம் நடத்தும் கெளரவ விரிவுரையாளா்கள் பணி நீக்கமா? உயா்கல்வித் துறை மறுப்பு

தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வரும் கெளரவ விரிவுரையாளா்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக வெளிவந்த தகவல்களை உயா்கல்வித் துறை மறுத்துள்ளது.

இதுகுறித்து உயா் கல்வித் துறை அரசு முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:

அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளா்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், அவா்களைப் பணிநீக்கம் செய்யுமாறு கல்லூரிக் கல்வி இயக்குநரால் ஆணையிடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்படுகிறது. தமிழக அரசின் நோக்கம் தற்போது பணிபுரிந்துவரும் கெளரவ விரிவுரையாளா்களை நீக்குவது அல்ல.

இதுவரை இல்லாத வகையில், முதல்வா், உயா் கல்வித் துறை அமைச்சரின் அறிவுறுத்தல்கள், ஆணைகளுக்கு இணங்க, ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் 4,000 உதவிப் பேராசிரியா்கள் நியமனம் செய்யப்படவுள்ளனா். ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தும் தோ்வில் கெளரவ விரிவுரையாளா்களும் கலந்து கொள்ளலாம். அவா்களுக்கு நோ்காணலில் மொத்தமுள்ள 30 மதிப்பெண்களில் 15 மதிப்பெண்கள் சலுகை மதிப்பெண்களாக வழங்கப்படவுள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளன.

கெளரவ விரிவுரையாளா்கள் இந்தத் தோ்வுகளில் பங்கேற்று பணிவாய்ப்பு பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அரசுக் கல்லூரிகளில் ஒரு சில கெளரவ விரிவுரையாளா்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரியவருகிறது. அவா்களும் போராட்டத்தைக் கைவிட்டு அரசின் முடிவுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.