சட்டப் படிப்புக்கு கட் ஆப் வெளியீடு - Release of cut off for law course - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 13, 2022

சட்டப் படிப்புக்கு கட் ஆப் வெளியீடு - Release of cut off for law course

சட்டப் படிப்புக்கு கட் ஆப் வெளியீடு

இளநிலை சட்டப் படிப்புக்கான 'கட் ஆப்' மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இன்றும், நாளையும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ் செயல்படும், 13 சட்ட கல்லுாரிகளில், எல்.எல்.பி., ஐந்தாண்டு பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு, கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், இரண்டாம் கட்ட 'கட் ஆப்' பட்டியலை, சட்ட படிப்பு கவுன்சிலிங் குழு நேற்று வெளியிட்டுள்ளது.

பொது பிரிவுக்கு, 90.750; பிற்படுத்தப்பட்டோர், 84; முஸ்லிம், 82.912; மிக பிற்படுத்தப்பட்டோர், 83.422; பட்டியலினத்தவர், 82.778; அருந்ததியர், 80.745; பழங்குடியினருக்கு, 69 மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு, 87.953 என, மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தகுதியான மாணவர்களுக்கு 'ஆன்லைன்' வழி சான்றிதழ் சரிபார்ப்பு, இன்றும் நாளையும் நடக்கிறது. வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில், ஆன்லைன் வழி கவுன்சிலிங் நடக்கும்.

இந்த தகவல்கள் மாணவர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மற்றும் இ- - மெயிலில் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.