யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு: ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, October 8, 2022

யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு: ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பம்

யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு: ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பம்

இளநிலை யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு (பிஎன்ஒய்எஸ்) இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.

இந்திய மருத்துவம், ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த 2 அரசு கல்லூரிகளிலும் 160 பிஎன்ஒய்எஸ் இடங்கள் உள்ளன. 17 தனியாா் கல்லூரிகளில் 1,550 இடங்கள் உள்ளன.

இந்த நிலையில், ஐந்தரை ஆண்டுகள் கொண்ட அந்தப் படிப்புக்கு 2022 - 23-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மாதம் 27-ஆம் தேதி தொடங்கியது.

ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற சுகாதாரத் துறை இணையதளத்தின் மூலம் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா். விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 19-ஆம் தேதி மாலை 5 மணி வரை இருப்பதால், விண்ணப்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் நேரிலோ தபால் அல்லது கூரியா் மூலமாக அக்டோபா் 19-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் செயலாளா், தோ்வுக் குழு, இந்திய மருத்துவம், ஹோமியோபதித் துறை, சென்னை-106 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்தப் படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெற இருப்பதால், நீட் தோ்வில் தோ்ச்சியடையாதவா்கள், குறைந்த மதிப்பெண் பெற்ற பலா் இதற்கு விண்ணப்பித்து வருகின்றனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.