அக்டோபர் 10 முதல் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, October 1, 2022

அக்டோபர் 10 முதல் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

அக்டோபர் 10 முதல் 12ம் தேதி வரை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி - 10th to 12th October Training for teachers in Numeracy and Writing

Virudhunagar District | விருதுநகர் மாவட்டத்தில் 4,128 ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10 முதல் 12ம் தேதி வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தின் மூலம், அரும்பு, மொட்டு மற்றும் மலர் என்று மூன்று படிநிலைகளில் 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

2025ம் ஆண்டிற்குள் 8 வயதுள்ள குழந்தைகளை எழுதுதல் மற்றும் வாசித்தலில் திறனுடையவர்களாக மாற்ற இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் சுமார் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா காலகட்டத்தில் போட்டப்பட்ட லாக்டவுன் காரணமான, ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு வாசித்தல் திறனும், எழுதும் திறனும் குறைந்துள்ளது. எனவே, இதனை களைந்திடும் நோக்கில், 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதில் அரும்பு என்கிற படிநிலையில் எண்கள் மற்றும் எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். மொட்டுக்கள் என்கிற படிநிலையில் எண்கள் மற்றும் எழுத்துக்களை மாணவர்கள் வாசிப்பதற்கு பயிற்சி அளிக்கப்படும். மலர் என்கிற படிநிலையில் சரளமாக வாக்கியங்களை வாசிக்கும் பயிற்சி அளிக்கப்படும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.