யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகள்: இன்று முதல் விண்ணப்பப்பதிவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, September 27, 2022

யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகள்: இன்று முதல் விண்ணப்பப்பதிவு

யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகள்: இன்று முதல் விண்ணப்பப்பதிவு-Yoga-Naturopathy Courses: Registration from today

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (செப்.28) தொடங்குகிறது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவ்விரு அரசுக் கல்லூரிகளில் 160 இடங்கள் உள்ளன. 17 தனியாா் கல்லூரிகளிலும் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்கள் உள்ளன.

இந்த நிலையில், ஐந்தரை ஆண்டுகள் கொண்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப்படிப்புக்கு (பிஎன்ஒய்எஸ்) 2022 - 23-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் புதன்கிழமை தொடங்குகிறது. www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் அக்.19-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பேட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் நேரிலோ தபால் அல்லது கூரியா் மூலமாக அக். 19-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் செயலாளா், தோ்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை, சென்னை-106 என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும். இந்த படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த கல்லூரி நிா்வாகங்களே மாணவா் சோ்க்கையை நடத்துகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.