இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியமும்" வழங்காமல் பயிற்சியிலும், விடுமுறையிலும் பாகுபாடு - பள்ளிக்கல்வித்துறை ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுக்கு SSTA சார்பாக கடிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, September 27, 2022

இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியமும்" வழங்காமல் பயிற்சியிலும், விடுமுறையிலும் பாகுபாடு - பள்ளிக்கல்வித்துறை ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுக்கு SSTA சார்பாக கடிதம்

இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியமும்" வழங்காமல் பயிற்சியிலும், விடுமுறையிலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பாகுபாடு காட்டுவது மன வருத்தத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாத வேதனையும் தருகிறது இதனை உடனடியாக மாற்ற வேண்டுமென மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுக்கு SSTA சார்பாக கடிதம் - Discrimination in training and holidays without “equal pay” for “equal work” of secondary teachers – letter on behalf of SSTA to Commissioner of School Education and Director of Elementary Education

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம்

பெறுநர்:மதிப்பிற்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள்

மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்;

பொருள்:

எங்கள் இயக்கத்தின் வேண்டுகோளை ஏற்று ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கியமைக்கு நன்றி தெரிவித்தல்-இடைநிலை ஆசிரியர்களுக்கு தேர்தல் அறிக்கை-311 ன் படி "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்குதல் சார்பாக-தொடக்கக்கல்வித்துறையில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் 1- முதல் 9. தேதி வரை விடுமுறை அளித்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஈடுசெய்ய விடுப்பதாக உள்ளதை மாற்றுதல் சார்பாக.

எங்களது SSTA இயக்கத்தின் சார்பாக பல ஆண்டுகளாக ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று மாண்புமிகு சமூக நீதி காக்கும் தமிழக முதல்வர் அவர்கள் காலை உணவு திட்டத்தை தொடங்கியமைக்கு ஆசிரியர்கள் சார்பாகவும் பெற்றோர்கள் சார்பாகவும் மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப்பள்ளி வரையுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இத்திட்டத்தினை கொண்டு செல்லுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த 12 ஆண்டு காலமாக “ஒரே பதவி" "ஒரே கல்வித்தகுதி" "ஒரே பணி" என அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தபோதிலும் மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்கப்படவில்லை.

கடந்த பத்தாண்டுகளாக இதனை சரிசெய்ய கோரி மிகக்கடுமையான காலவரையற்ற உண்ணாவிரத போராட்டங்கள் நடந்தன, அப்போது திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தற்போதைய முதல்வர் அவர்களும் இரண்டு முறை நேரில் வந்து எங்களுடைய நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென ஆதரவினை நேரில் வழங்கினார்..தற்போது அமைந்துள்ள தமிழக அரசின் இந்த ஒற்றைக்கோரிக்கையை தேர்தல் வாக்குறுதி எண்-311 என்ற தலைப்பில் "சம வேலைக்கு" "சம ஊதியம்" 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பு இடம்பெற்றுள்ளது வயது மூப்பின் காரணமாக நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர், எனவே எங்கள் ஒற்றை வாழ்வாதார கோரிக்கையினை சமூக நீதி காக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் இந்த ஒற்றைக் கோரிக்கையை நிறைவேற்றி தர உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மாணவர்களுக்கு ஒன்றாம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை முதல் பருவ விடுமுறை அளித்திருப்பது மகிழ்ச்சியே காய்ச்சல் அதிகம் பரவும் நேரத்தில் இந்த விடுமுறை மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒன்றாம் தேதி முதல் 9-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஜூன் மாதம் ஐந்து நாட்கள் எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு சென்ற ஆசிரியர்களுக்கு மட்டும் ஈடு செய் விடுப்பாக கருதப்படும் என்று கூறுவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது.

பயிற்சிக்கு செல்லாதவர்களுக்கு விடுமுறையும், பயிற்சி சென்றவர்களுக்கு மட்டும் ஈடு செய் விடுப்பு என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஏற்கனவே முத்தமிழ் அறிஞர் வழங்கப்பட்ட மத்திய அரசு ஊதியமும் இல்லாமல் மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான "சமவேலைக்கு" "சம ஊதியம்" கூட பெற முடியாமல் மிகுந்த மன வருத்தத்தோடும், வறுமை நிலையிலும் இடைநிலை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் அதில் கூடுதலாக பயிற்சிகளிலும், விடுமுறையிலும் இதுபோன்று பாகுபாடு பார்ப்பது மிகுந்த வேதனையை தருகிறது அதனை மாற்றி அனைத்து ஆசிரியர்களுக்கும் மேற்கண்ட விடுமுறையை முதல் பருவ விடுமுறையாக கருதி ஆணை பிறப்பிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.