The fever is spreading... Do exams matter in schools? - காய்ச்சல் பரவுகிறதே... பள்ளிகளில் தேர்வு முக்கியமா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 19, 2022

The fever is spreading... Do exams matter in schools? - காய்ச்சல் பரவுகிறதே... பள்ளிகளில் தேர்வு முக்கியமா?

தற்போதுள்ள சீதோஷ்ண நிலையில் காற்றின் மூலம் பரவும் வைரஸ்களால், 'ஸ்வைன் ப்ளூ' கொரோனா வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. ஆனால், காலாண்டு தேர்வை காரணம் காட்டி மாணவர்கள் காய்ச்சலுடன் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தப்படுவதாக பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.'ஸ்வைன் ப்ளூ' கொரோனா வைரஸ் இரண்டுமே ஒரே வகையைச் சேர்ந்தவை. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மினாலோ, இருமினாலோ அவரது சளித்துகள்கள் காற்றில் கலந்துவிடும்.

இதை அருகில் உள்ளவர்கள் சுவாசிக்கும் போது, எளிதாக பாதிக்கப்படுகின்றனர். இரண்டு வகை காய்ச்சலுக்குமே சளி பரிசோதனை மாதிரி எடுக்கப்படுகிறது. சில இடங்களில் காய்ச்சல் நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் இரண்டு முறை சளி பரிசோதனை எடுக்கப்பட்டு, 'ஸ்வைன் ப்ளூ' கொரோனா தொற்று உள்ளதா என தனித்தனியாக கண்டறியப்படுகிறது. கொரோனா, 'நெகடிவ்' என பரிசோதனை முடிவு வந்த நோயாளிகளுக்கு, மீண்டும் சளி பரிசோதனை செய்யப்பட்டு, 'ஸ்வைன் ப்ளூ' காய்ச்சலா கண்டறியப்படுகிறது.

ஜாக்கிரதை

'ஸ்வைன் ப்ளூ' காய்ச்சல், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களையும் கடுமையாக பாதிக்கிறது. குறிப்பாக, ரத்தஅழுத்தம், சர்க்கரை, இருதய பாதிப்பு போன்ற இணைநோய் உள்ளவர்களை தீவிர நிலைக்கு கொண்டு செல்கிறது. இதில், மூச்சுதிணறல் ஏற்படுவதால் உடனடியாக மருத்துவ கண்காணிப்பு அவசியம்.கொரோனா பெருந்தொற்றின் போது, இரண்டாண்டுகளாக பள்ளி செல்லாமல் பாதுகாப்பாக வளர்ந்த மழலையர்கள் தான் இப்போதைய காய்ச்சலுக்கு அதிகம் இலக்காகின்றனர்.இந்த வைரஸ் காய்ச்சல் எந்த வயதினரையும் பாதிக்கும் என்பதோடு, யார் மூலமும் பரவும் என்பதே மிகப்பெரிய சவாலான விஷயமாக உள்ளது.

தமிழகத்தில் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கு அரசும் பள்ளிக் கல்வித்துறையும் இன்னும் விடுமுறை அளிக்கவில்லை. ஆனால், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அடுத்தடுத்து தொடர்மழை ஆரம்பித்தால், பாதிப்பின் வேகம் பலமடங்காக அதிகரிக்கும் என்கின்றனர் டாக்டர்கள்.

தொற்று பரவும்

டாக்டர்கள் கூறியதாவது:காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவ - மாணவியரை பெற்றோர், எங்களிடம் அழைத்து வரும் போது, பள்ளிக்கு செல்லக்கூடாது என, அறிவுறுத்துகிறோம். ஆனால், ஆசிரியர்கள் மாத்திரை போட்டுக் கொண்டாவது காலாண்டு தேர்வெழுத வேண்டும் என, நிர்ப்பந்திப்பதாக பெற்றோர் வேதனையுடன் கூறுகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் மூலம் வகுப்பறையில் உள்ள பெரும்பாலான மாணவர்களுக்கு காய்ச்சல் தொற்று ஏற்படும்.

இதுகுறித்து, விழிப்புணர்வு இல்லை என்பதே வேதனையான விஷயம்.சுகாதாரத்துறை இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அரசிடம் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்க வலியுறுத்த வேண்டும். கொரோனாவை போலவே இதிலும் மூச்சுத்திணறல் பிரச்னையுள்ளதால் சிகிச்சையும், ஓய்வும், தனிமையும் அவசியம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.