Cannabis circulation in public school - அரசு பள்ளியில் கஞ்சா புழக்கம்: மாணவர்களின் வாழ்க்கை பாழாக வாய்ப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 19, 2022

Cannabis circulation in public school - அரசு பள்ளியில் கஞ்சா புழக்கம்: மாணவர்களின் வாழ்க்கை பாழாக வாய்ப்பு

அரசு பள்ளியில் கஞ்சா புழக்கம்: மாணவர்களின் வாழ்க்கை பாழாக வாய்ப்பு - Cannabis circulation in public school: Potential to ruin students' lives

குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மா ணவர்களிடையே கஞ்சா புழக்கம் உள்ளது குறித்து தலைமை ஆசிரியர் பெற்றோர் உரையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய தாலுகாவில் சிறுவர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை கடந்த சில ஆண்டுகளாக பெருமளவில் நடைபெற்று வருகிறது. இது குறித்து பலமுறை போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டும் எந்தவித கடும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் மாணவர்கள் போதை தரும் கஞ்சாவை பயன்படுத்திவிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் தங்கள் வாழ்வை பாழ்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும் மாலை நேரங்களில் சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய நகர் பகுதிகளிலும் மற்றும் பூம்புகார், தரங்கம்பாடி ஆகிய சுற்றுலா தளங்களிலும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கஞ்சா புதைத்து விட்டு சிரித்தபடி நிற்பதும், அவர்களுக்குள்ளேயே கடும் சண்டை இட்டுக் கொள்வதும், சில நேரங்களில் பிறரிடம் மோதல் போக்கை கையாள்வது ஆகியவை பொதுமக்களை பீதியடைய செய்கிறது. தற்போது குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பல மாணவர்கள் இடையே கஞ்சா பழக்கம் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளித்ததுடன், குட்கா விற்பனையாளர் ஒருவரை கைது செய்து தங்கள் பணியை முடித்துக் கொண்டனர்.

இந்நிலையில் அப்பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவரின் பெற்றோரும், தலைமை ஆசிரியரும் மாணவர்கள் இடையே உள்ள கஞ்சா பழக்கம் குறித்து பேசுவதும், பலமுறை புகார் தெரிவித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தலைமை ஆசிரியர் தெரிவிப்பதும் ஆன வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.