Rank List Release for Paramedical Courses - துணை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: செப். 21-ம் தேதி முதல் கலந்தாய்வு தொடக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, September 17, 2022

Rank List Release for Paramedical Courses - துணை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: செப். 21-ம் தேதி முதல் கலந்தாய்வு தொடக்கம்

துணை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: செப். 21-ம் தேதி முதல் கலந்தாய்வு தொடக்கம் - Rank List Release for Paramedical Courses: Sep. Consultation will start from 21st

துணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் துணை மருத்துவப் படிப்புகளுக்கு 2022-23-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார்.

மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குநர் சம்சத் பேகம், மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் முத்துச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் துணை மருத்துவ பட்டப்படிப்பு, மருந்தாளுநர்கள், டிப்ளமோ நர்சிங், டிப்ளமோ ஆப்டோமெட்ரி, பாராமெடிக்கல் டிப்ளமோ சான்றிதழ் படிப்புகளுக்கு121 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,526 இடங்கள் உள்ளன. அதேபோல், 348 சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 15,307 இடங்கள் இருக்கின்றன.
இந்த இடங்களுக்கு 2022-23-ம்கல்வியாண்டுக்கு 87,764 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். இதில், துணை மருத்துவப் படிப்புகளுக்கு மட்டும் 58 ஆயிரத்து 980 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 58,141 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மருந்தாளுநர் படிப்புக்கு 5,271 பேர் விண்ணப்பித்த நிலையில் 5,206 விண்ணப்பங்கள் ஏற்கபட்டன.

டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு12 ஆயிரத்து 624 பேர் விண்ணப்பித்ததில், 12 ஆயிரத்து 478 விண்ணங்கள் ஏற்கப்பட்டு உள்ளன.டிப்ளமோ ஆப்டோமெட்ரி படிப்புக்கு 1,055 பேர் விண்ணப்பித்ததில், 948 விண்ணப்பங்களும், பாராமெடிக்கல் டிப்ளமோ சான்றிதழ் படிப்புக்கு 7,793 பேர் விண்ணப்பித்ததில், 7540 பேருக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

அவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் மாணவர் சேர்க்கை வரும் 21-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நாட்கள் நடைபெறும். கவுன்சலிங்கில் யார், யார் எந்தந்த நேரத்தில் பங்கேற்க வேண்டும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

இந்தாண்டு எம்பிபிஎஸ் படிப்புக்கு 8,225 இடங்கள் உள்ளன. அதில், 7.5 சதவீத ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 455 இடங்கள் கிடைக்கும். அதேபோல, 2,160 பிடிஎஸ் இடங்களில் 114 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும்.

நீட் தேர்வு பட்டியல் கிடைத்தவுடன், மாணவர் சேர்க்கை நடவடிக்கை தொடங்கப்படும். அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை. ‘ப்ளூ’ காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.