அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாளை (17.09.2022) சமூகநீதி நாள் அனுசரிக்க அரசாணை வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, September 16, 2022

அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாளை (17.09.2022) சமூகநீதி நாள் அனுசரிக்க அரசாணை வெளியீடு!

அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாளை (17.09.2022) சமூகநீதி நாள் அனுசரிக்க அரசாணை வெளியீடு!



உறுதி மொழி - தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர்-17 ஆம் நாளை ஆண்டுதோறும் 'சமூகநீதி நாள்' ஆக அனுசரிப்பது - உறுதிமொழி மேற்கொள்வது - ஆணை வெளியிடப்படுகிறது.



ஆணை:

பார்வை 1 இல் படிக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-இன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் எனப் போற்றப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்களின் அறிவுச் சுடரை போற்றும் விதமாக அவரது பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் நாளை ஆண்டுதோறும் "சமூக நீதி நாள்" ஆகக் கொண்டாடுவது என்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது என சட்டமன்றத்தில் அறிவித்தார்கள்.

2. இதன்படி பார்வை 2 - இல் படிக்கப்பட்ட அரசாணையில் சாதிய ஏற்றத் தாழ்வுகள். தீண்டாமைக் கொடுமைகளை, மத வேறுபாடுகளை உதறித் தள்ளி, பெண்களைச் சமநிலையில் மதித்து, அந்த எண்ணத்தை விதைக்கும் விதமாக. தனது கொள்கையை உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் நாள் அன்று ஆண்டுதோறும் தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் "சமூக நீதி நாள்" உறுதி மொழியை எடுத்துக் கொள்ள ஆணை வெளியிடப்பட்டது.

3. இதன் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ஆம் நாள் அன்று தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் "சமூக நீதி நாள்r" உறுதி மொழியை எடுத்துக் கொள்ளும் விதமாகப் பின்வரும் உறுதி மொழியினை அனுசரிக்க முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது:

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.