மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு - Commissioner of School Education orders to District Principal Education Officers - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 29, 2022

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு - Commissioner of School Education orders to District Principal Education Officers

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு - Commissioner of School Education orders to District Principal Education Officers

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மாதந்தோறும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடத்தி கல்வித்தரத்தை உயர்த்த அறிவுரை வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை 50 முதல் 60 சதவீதம் வரை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமை ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்படக்கூடிய வகுப்புகளில் அவர்கள் பாடம் நடத்துகின்றார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தொடக்க அனுமதி ஆணை பெறாத தனியார் பள்ளிகள் தொடர்ந்து செயல்படாததை உறுதி செய்ய வேண்டும்.

அரசின் விதிகளை பின்பற்றி பள்ளிகளுக்கு தொடர்ந்து அங்கீகாரத்தை புதுப்பித்து ஆணை அளிக்கலாம். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மாதம் குறைந்தபட்சம் 12 பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும். பள்ளியில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டார். போக்சோ தொடர்பான புகார்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு கூட்டம் நடத்தி வருகின்றனர். அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள சிவகங்கை, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செப்டம்பர் 16,17-ல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான கூட்டத்தில் ஆலோசனை நடத்தபட்ட நிலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மாணவர்களுக்கு புரிகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்டங்களிலும் செயல்படக்கூடிய தனியார் பள்ளிகள் தொடர்ந்து செயல்படாததை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வதை தனியார் பள்ளிகளை பொறுத்த வரை அந்த கட்டண குழுவிற்கு அனுப்பி அந்த கட்டண குழுவானது நிர்ணயிக்கக்கூடிய தொகையை CEO மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உறுதி செய்ததன் பின்பாகவே பள்ளிகளில் தரவேண்டும் என்று உத்தரவு அளிக்கப்பட்டிருக்கிறது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் அந்த பள்ளியினுடைய கட்டிட உறுதி தன்மை சரியாக செயல்படுகிறதா என்று ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஒவ்வொரு பள்ளிக்கும் 16 இலக்கமாக கொடுக்கப்பட்டிருக்ககூடிய EMIS என்ற எண் என்பது மாணவர்கள் எளிதாக மனதில் வைக்கக்கூடிய நிலையில் இல்லை என்றும் தற்போது தொலைப்பேசி எண் போலவே 10 இலக்கங்கள் ஆன எண்களாக மாற்றப்பட்டிருக்கிறது. அக்டோபர் 1-ம் தேதி முதல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட கல்வி அலுவலர்கள், இடைநிலை அதைப்போல தொடக்கக்கல்வி மற்றும் தனியார் பள்ளிகளுக்கென தனிதனியாக கொடுக்கப்படிருக்ககூடிய அந்த அலுவலகங்கள் செயல்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருகிறது.

அதைப்போல மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ள மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க வேண்டும் என்றும், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதலாக வகுப்புகள் நடத்தி அவர்களுக்கு எந்த பாடம் புரியவில்லை என்பதை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்து சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறப்படுகின்றது. இவை அனைத்தையும் முழுமையாக பின்பற்றி மாணவர்களின் கல்வி தரத்தையும், தேர்ச்சி விதத்தையும் அதிகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.