உயர்கல்விக்கு விண்ணப்பித்த மாணவிகளின் சான்றிதழ்களை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு - பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 22, 2022

உயர்கல்விக்கு விண்ணப்பித்த மாணவிகளின் சான்றிதழ்களை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு - பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

உயர்கல்விக்கு விண்ணப்பித்த மாணவிகளின் சான்றிதழ்களை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு

பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்திற்குவிண் ணப்பித்த மாணவிகளின் சான்றிழ்களை ஆய்வு செய்யும் பணிகளில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஈடு பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் தமிழக அரசு அறிமுகப்ப டுத்தி உள்ளது. அதன் படி அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ்2 வரை பயின்று, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாண விகளுக்கும் பட்டப்ப டிப்பு, பட்டயப்படிப்பு, தொழில்படிப்பு ஆகியவற் றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும்வரை மாதம் 81,000, அவர்கள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் தமிழக அரசின் பட்ஜெட் டில் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் பள்ளிவாரியாக ஏழுகட் டங்களாக 5.583 மாண விகளின் சான்றிதழ்களை சரிபார்த்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பதி வேற்றம் செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் மீண்டும் உரிய ஆவணங் களுடன் பள்ளிவாரியாக சரிபார்த்து உறுதிபடுத்தி அனுமதி அளிக்கப்படும். ஏதேனும் தவறு ஏற்படும் பட்சத்தில் சார்ந்த சான் றிதழ்களின் விவரங்களை மாவட்டத் திட்ட அலு வலகத்திற்கு தெரிவிக் கப்படும். அதன்பிறகு அந்த விண்ணப்பத்தை ஒருமுறை உறுதி செய்யப்படும். இப்பணியை விரைந்து முடிக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசி ரியர்களும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.