தொடக்கக் கல்வி - EMIS மாணவர் விவரம் - 2021- 22ஆம் கல்வி ஆண்டை நிறைவு செய்த மாணவர்கள் - 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு TC வழங்குதல் மற்றும் மற்ற வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு மாற்றுதல் (Promote) - 2022-23ஆம் கல்வியாண்டு புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்து பதிவேற்றுதல் - அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள் : 01.07.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 1, 2022

தொடக்கக் கல்வி - EMIS மாணவர் விவரம் - 2021- 22ஆம் கல்வி ஆண்டை நிறைவு செய்த மாணவர்கள் - 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு TC வழங்குதல் மற்றும் மற்ற வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு மாற்றுதல் (Promote) - 2022-23ஆம் கல்வியாண்டு புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்து பதிவேற்றுதல் - அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள் : 01.07.2022

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 6.

ந.க.எண். 012280 / ஜெ2 / 2022,

நாள் : 01.07.2022.

பொருள் : தொடக்கக் கல்வி - EMIS மாணவர் விவரம் - 2021- 22ஆம் கல்வி ஆண்டை நிறைவு செய்த மாணவர்கள் - 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு TC வழங்குதல் மற்றும் மற்ற வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு மாற்றுதல் (Promote) - 2022-23ஆம் கல்வியாண்டு புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்து பதிவேற்றுதல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக.

பார்வை :

சென்னை -06, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடித ந.க.எண்.2411/®2/2020, நாள். 24.06.2022

பார்வையில் காணும் கடிதத்தில், எண்ணும் எழுத்தும் திட்டம், 2022-2023ஆம் கல்வியாண்டு முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1, 2 மற்றும் 3ஆம் வகுப்புகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் இத்திட்டத்தின் இலக்கு 2025ஆம் கல்வியாண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3ஆம் வகுப்பை நிறைவு செய்த மாணவர்கள் பொருள் புரிந்து படிக்கவும், எழுதவும் அடிப்படைக் கணக்குகளைச் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் முதற்கட்டமாக, 2 மற்றும் 3ஆம் வகுப்புகளில் 04.07.2022 முதல் 08.07.2022 வரை குழந்தைகளின் கற்றல் நிலையைக் கண்டறிய அடிப்படை கற்றல் நிலை அறிதல் (Baseline Survey) மதிப்பீட்டை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அடிப்படை கற்றல் நிலை அறிதல் (Baseline Survey) மதிப்பீட்டிற்காக 2022 - 2023ஆம் கல்வியாண்டில் பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சிசார் விவரங்களையும் (Promotion Module) மாற்றுச் சான்றிதழையும் (T.C) கல்வி மேலாண்மை தகவல் முறைமை (EMIS) வழியாக சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் 01.07.2022-க்குள் பதிவேற்றம் செய்வதற்கு உரிய தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, 2022-2023ஆம் கல்வியாண்டில் அனைத்து தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

* 2021-22ஆம் கல்வி ஆண்டில் தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் முறையே 5 மற்றும் 8ஆம் வகுப்பு பயின்று நிறைவு செய்த மாணவர்களுக்கு TC Prepare செய்து அவர்களின் பெயரை Common Poolக்கு மாறுதல் செய்து TC Generate செய்ய வேண்டும்.

* நடுநிலைப் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு மாணவர்களை Common Poolக்கு நகர்த்திய பின்னர் 7ஆம் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்பு, 6ஆம் வகுப்பிலிருந்து 7ஆம் வகுப்பு, 5ஆம் வகுப்பிலிருந்து 6ஆம் வகுப்பு, 4ஆம் வகுப்பிலிருந்து 5ஆம் வகுப்பு, 3ஆம் வகுப்பிலிருந்து 4ஆம் வகுப்பு, 2ஆம் வகுப்பிலிருந்து 3ஆம் வகுப்பு, 1ஆம் வகுப்பிலிருந்து 2ஆம் வகுப்பு என்ற வரிசையில் ஒவ்வொரு வகுப்பில் பயின்ற மாணவர்களை அடுத்த உயர் வகுப்பிற்கு மாறுதல் (Promote) செய்திடல் வேண்டும். * தொடக்கப் பள்ளிகளில் 5ஆம் வகுப்பு மாணவர்களை Common Poolக்கு நகர்த்திய பின்னர் 4ஆம் வகுப்பிலிருந்து 5ஆம் வகுப்பு, 3ஆம் வகுப்பிலிருந்து 4ஆம் வகுப்பு, 2ஆம் வகுப்பிலிருந்து 3ஆம் வகுப்பு, 1ஆம் வகுப்பிலிருந்து 2ஆம் வகுப்பு என்ற வரிசையில் ஒவ்வொரு வகுப்பில் பயின்ற மாணவர்களை அடுத்த உயர் வகுப்பிற்கு மாறுதல் (Promote) செய்திடல் வேண்டும்..

* இவ்வாறு ஒவ்வொரு வகுப்பிலும் 2021-22ஆம் கல்வியாண்டில் பள்ளியில் கல்வி பயின்ற அனைத்து மாணவர்களையும் அவர்கள் பயின்ற வகுப்பின் அடுத்த நிலைக்கு தேர்ச்சி அளித்து மாறுதல் செய்து EMIS உள்ளீட்டு பணிகளை 03.07.2022ஆம் தேதிக்குள் நிறைவு செய்தல் வேண்டும்.

* மேலும் 2022-23ஆம் கல்வி ஆண்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை புதிதாக சேர்க்கையாகியுள்ள மாணவர்கள் அனைவரின் விவரங்களையும் EMS இணையதளத்தில் 03.07.2022ஆம் தேதிக்குள் உள்ளீடு செய்திடல் வேண்டும். வேறு பள்ளிகளில் பயின்று தற்போதைய பள்ளியில் சேர்க்கையான மாணவர்களைப் பொருத்தவரை EMS Unique Id எண்ணினைக் கொண்டு அவர்களின் விவரங்களை Common Pool- லிருந்து ஈர்த்திடல் வேண்டும்.

* அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் நர்சரி & பிரைமரி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் மேற்குறிப்பிட்ட இதே வழிமுறைகளைப் பின்பற்றி பணிகளை முடித்திட வேண்டும்.

* EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களை கொண்டே வரும் நாட்களில் விலையில்லா நலத்திட்டங்கள் உட்பட அனைத்து பணிகளுக்கும் தேவையான மாணவர் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே, சேர்க்கையான புதிய மாணவர்கள் மற்றும் ஏற்கனவே பயின்று வரும் மாணவர்களின் விவரங்களை விடுதல்கள் மற்றும் குறைபாடுகள் எதுவும் இன்றி சரியாக பூர்த்தி செய்து EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்திடவும் 04.07.2022 முதல் 08.07.2022 வரை குழந்தைகளின் கற்றல் நிலையைக் கண்டறிய மேற்கொள்ளப்படவுள்ள அடிப்படை கற்றல் நிலை அறிதல் (Baseline Survey) மதிப்பீடு குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குத் தேவையான அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடக்கக் கல்வி இயக்குநர் பெறுநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் வழியாக இவை நகல் இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை - 06 அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.