தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். நுங்கம்பாக்கத்தில் இருக்கும் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்த நிலையில் மாநிலத்தில் உள்ள பிற பள்ளிகளிலும் ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டுள்ள மிதிவண்டிகள் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட இருக்கிறது. முதல் கட்டமாக 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்க ஒப்பந்தங்கள் போடப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த வருடம் அடர் நீல நிறத்தில் சைக்கிள்கள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு, மா சுப்பிரமணியன் மற்றும் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த நிலையில் விழாவில் கலந்து கொண்ட ஒரு மாணவியை முதல்வர் சென்ற போது அவரிடம், "சைக்கிள் வந்துவிட்டது. லேப்டாப் எப்போது கிடைக்கும்." என்று கேட்டார் இதை கேட்டவுடன் முதல்வர் ஸ்டாலின் அந்த மாணவியின் அருகில் சென்று விரைவில் கிடைக்கும் என்று கூறியுள்ளார் இது குறித்து அந்த மாணவி பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Monday, July 25, 2022
New
முதல்வரிடம் மாணவி கேட்ட அந்த ஒரு கேள்வி.. தேடிச்சென்று பதில் கூறிய முதல்வர் ஸ்டாலின்.!
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.