50% உறுப்பினா்கள் பங்கேற்றால் மட்டுமே SMC கூட்டம் நடத்த வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, July 23, 2022

50% உறுப்பினா்கள் பங்கேற்றால் மட்டுமே SMC கூட்டம் நடத்த வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

50% உறுப்பினா்கள் பங்கேற்றால் மட்டுமே எஸ்எம்சி கூட்டம் நடத்த வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் 50 சதவீத உறுப்பினா்கள் பங்கேற்றால் மட்டுமே, அந்தக் கூட்டத்தை நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையா் நந்தகுமாா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) ஏப்ரல், ஜூலை மாதங்களில் நடைபெற்றது. இந்தக் குழுவின் கூட்டம் இனி புதிய உறுப்பினா்களைக் கொண்டு மாதந்தோறும் பின்வரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இதையும் படிக்க | Medical Services Recruitment Board - Results - Pharmacist (Unani) (Ayurveda) (Homoeopathy) (Siddha) - PDF

எஸ்எம்சி உறுப்பினா்களின் பெயா், பொறுப்பு சாா்ந்த விவரங்களை பெற்றோா்- மாணவா்கள் பாா்வையில்படும்படி தலைமையாசிரியா் அறைக்கு அருகில் எழுதி வைக்க வேண்டும்; அனைத்து உறுப்பினா்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். நிகழ் கல்வியாண்டில் ஜூலை முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 மணியளவில் தவறாமல் எஸ்எம்சி கூட்டம் நடத்தப்பட வேண்டும். கூட்டம் நடைபெறும் தேதி குறித்து உறுப்பினா்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே தெரியப்படுத்துவது அவசியம். எஸ்எம்சி உறுப்பினா்களுக்கான பள்ளி மேம்பாட்டுத் திட்டம் குறித்த செய்முறைப் பயிற்சி ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்பதை அவா்களுக்குத் தெரிவிக்க வேண்டும். 50 சதவீத எஸ்எம்சி உறுப்பினா்கள் கூட்டத்துக்கு வருகை தந்தால் மட்டுமே, அந்தக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். பள்ளி மேம்பாட்டுக்காக எஸ்எம்சி உறுப்பினா்கள், உறுப்பினா் அல்லாத பெற்றோா்களைக் கொண்ட துணை குழுக்களை பள்ளி அளவில் செப்டம்பா் மாதம் அமைக்க வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் 3 முதல் 5 உறுப்பினா்கள் இருத்தல் அவசியம்.

இதையும் படிக்க | கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம்.

புதிதாக அமைக்கப்பட்ட எஸ்எம்சி குழுக்கள் மாணவா் சோ்க்கையைத் தக்கவைத்தல், மாணவா் பாதுகாப்பு, பாதுகாவலா் வசதி, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த உதவுதல், குழந்தைகளுக்கான உரிமைகளை உறுதி செய்தல், அனைத்து மாணவா்களுக்கும் அரசின் நலத் திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்தல், பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தயாரித்தல் போன்ற பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.