தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 25, 2022

தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிப்பு



தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -6.

பொருள்

தொடக்கக் கல்வி - 2021 - 2022 ஆம் கல்வியாண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் - சார்பு.

பார்வை

அரசாணை (நிலை) எண்.176, பள்ளிக் கல்வித் (ப.க5(1)த் துறை, நாள்.17.12.202

1| தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 756/01/2021, நாள்.03.02.2022, 05.02.2022, 15.02.2022,25.02.202

2 பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண். 25154/01/இ1/2021, நாள். 30.12.2021 , 10.01.2022 மற்றும் 28.01.2022

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எண்.1258,1264&1272 of 2022

5. | தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.756 /®1/2021, நாள்.15.02.2022

6. அரசாணை (நிலை) எண்.107, பள்ளிக் கல்வித் (ப.க5(1)த் துறை, நாள்.17.06.2022

7. | தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.756 /®1/2021, நாள்.17.06.2022

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் பணிநிரவல் / பணிமாறுதல் / மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு பார்வையில் காணும் அரசாணைகள் மற்றும் செயல்முறைகளின்படி பார்வை 3-ல் காணும் அட்டவணைப்படி நடத்த திட்டமிடப்பட்டது.

அக்கலந்தாய்வின் போது மலைப்பாங்கான இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு அரசாணை (நிலை) எண்.404 கல்வி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நாள்.25.05.1995 -ன்படி மலைச்சுழற்சி (Hill Rotation) மாறுதல்களை அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றி அந்த பதவிகளுக்கு பட்டியலில் குறிப்பிட்டுள்ள அந்தந்த நாட்களுக்கு முன்னர் மாறுதல் வழங்கிடவும் அதன் பின்னர் ஏற்படக்கூடிய காலிப்பணியிடங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பின்னர் உரிய இணையவழி கலந்தாய்வினை நடத்திடவும் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

பார்வை 4-ல் காணும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் இவ்வியக்கக செயல்முறைகள் ந.க. எண்.756 / 01 / 2021, நாள். 11.01.2022 -க்கு தடையாணை பிறப்பிக்கப்பட்டது. மலைச்சுழற்சி முறை பின்பற்றப்படும் ஒன்றியங்களுக்குள் மட்டும் கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் - அறிவிக்கப்படும் என சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பார்வையில் காண் இவ்வியக்க 25.02.2022 செயல்முறைகளின்படி சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண்.1258, 1264 மற்றும் 1272 / 2022 -ல் இவ்வியக்கக செயல்முறைகள் ந.க.எண்.756/01/2021 , நாள்.11,01.2022 க்கு தடையாணை நிலுவையில் உள்ளதால் இவ்வியக்கக செயல்முறையில் நாள் 15.02.2022 -ல் தெரிவிக்கப்பட்டுள்ள கலந்தாய்வு அட்டவணையில் உள்ளவாறு இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் பொதுமாறுதல் 25.02.2022 முதல் நடைபெறும் கலந்தாய்வுகள் பின்னர் அறிவிக்கப்படும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டது.

தற்போது பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வுகள் கீழ்கண்ட அட்டவணையின்படி நடைபெறும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

ஒரு சில நீதிமன்ற வழக்குகளில் காலிப்பணியிடங்கள் புதிதாக ஏற்படின் அக்காலிப்பணியிடங்களை பதவி உயர்வு வழங்குவதற்கும், ஏற்கனவே பணிநிரவலில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் சென்றர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் தீர்ப்புகள் பெறப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்திற்குள் மாறுதல் நடைபெற்ற கடைசி நாளான 25.02.2022 நிலவரப்படி உள்ள காலிப்பணிடங்களுக்கு தான் மாவட்டம் விட்டு மாவட்டம் பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் . 2021-2022 பொதுமாறுதல் கலந்தாய்வில் ஒன்றித்திற்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் விருப்ப மாறுதலில் சென்றவர்களின் பெயர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் பெயர் பட்டியலிருந்து அன்னாரின் பெயரை நீக்கம் செய்யப்பட வேண்டும். 2021-2022 உபரி ஆசிரியர் பணிநிரவல் மற்றும் LKG,UKG பணிநிரவல் ஆகியவற்றில் சென்ற ஆசிரியர்கள் பெயர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்திருந்தால் அவர்களின் பெயர்களை நீக்கம் செய்ய வேண்டியதில்லை. இப்பணிநிரவலில் மாறுதல் பெற்றவர்களுக்கு இவ்வொரு ஆண்டு மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதலில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். ஆனால் எதிர்வரும் ஆண்டுகளில் நடைபெறும் பொதுமாறுதல் கலந்தாய்வில் இதனை உரிமையாக கோர இயலாது. இவ்வாண்டிற்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படுகிறது. 3. மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்விற்கு பட்டியலில் NULL என குறிப்பிட்டு இருந்தால், அவ்வாசிரியர்களின் விண்ணப்பத்துடன் சரிபார்த்து NULL என்ற கலத்தினை பூர்த்தி செய்ய பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட விண்ணப்பத்திலும் NULL என மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதெனில் விண்ணப்பதாரரிடம் விருப்ப கடிதம் பெற்று NULL கலத்தினை பூர்த்தி 'செய்ய பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடக்கக் கல்வி 2021-2022 ஆம் கல்வியாண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ண ப்பித்த ஆசிரியர்களின் விவரங்கள் 21.06.2022 அன்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இவ்விவரங்களைக்கொண்டே மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான முன்னுரிமைப் பட்டியல் (Seniorlity list) EMIS இணையதளத்தில் வெளியிடப்படும். எனவே, ஆசிரியர்கள் விவரங்களை சரியாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அதே படிவத்தில் (Excel Format ) - ல் திருத்தம் செய்து மீள அனுப்ப வேண்டும். திருத்தங்கள் ஏதும் இல்லை எனில் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளது என சான்றளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான முன்னுரிமைப் பட்டியல், எந்த பதவியில் மாறுதலுக்கு விண்ணப்பித்தாரோ அந்த பதவியில் முதன் முதலில் பணியில் சேர்ந்த நாளினைக் கொண்டு முன்னுரிமை நிர்ணயம் செய்யப்படும். பணியில் சேர்ந்த நாள் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் பிறந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்படும்.

மாறுதல் கலந்தாய்வுகள் online மூலம் நடைபெறுவதால் EMIS இணையதளத்தில் Seniority list வெளியிடப்பட்ட பின் எவ்வித திருத்தங்களும் ஏற்கப்படமாட்டாது. இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.