ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து பயின்றிட விண்ணப்பங்கள் வரவேற்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 24, 2022

ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து பயின்றிட விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு அரசு

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்

சென்னை - 500 006.

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை 2022-2023

இளைாயதளத்தில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவளங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2. விண்ணப்பங்கள்

https://scert.tnschools.gov.in என்ற முகவரியில் 04.07.2022 அன்று காலை 10.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

இவ்விணையதளத்தில் உரிய கட்டணத்தைச் செலுத்தி தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்யலாம். கட்டணம் செலுத்து வதற்குத் தங்களது பற்று அட்டை (Debit Card), கடன் அட்டை (Credit Card) மற்றும் இணைய வங்கிச் சேவை (Intermet Banking) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்திச் செலுத்தலாம்.

விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப்பிரிவு / பிற்படுத்தப்பட்ட வகுப்பு/ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு ரூ.500/- மாற்றுத்திறனாளிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250/- நிர்ளாயிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கத் தங்களது விவரங்களை ஒவ்வொன்றாக உள்ளீடு செய்து, அனைத்து விவரங்களையும் பதிவேற்றியபிள் சேமிப்பு (Savé) பொத்தானை அழுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்கள் விவரங்கள் அனைத்தையும் உள்ளீடு செய்து சரிபார்த்த பிறகு இறுதியாக அப்பக்கத்தின் கீழுள்ள, 'Submit' பொத்தான் உதவியுடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பிறகு பணம் செலுத்துவதற்கான தளம் உருவாகும். இத்தளத்தில் பணம் செலுத்திய பிறகுதான் தங்களது விண்ணப்பம் முழுமையாகப் பதிவேற்றம் செய்யப்படும்.

இணையதளத்தில் விண்ளாப்பதாரர் அளிக்கும் விவரங்கள் சரியானவையாக இருக்க வேண்டும். அவர் அளிக்கும் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்த பின்பே அவரது சேர்க்கை உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

விண்ணப்பத்தில் அளிக்க வேண்டிய முழுமையான விவரங்கள் மற்றும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு பயிற்சி வழங்கும் அரசு நிறுவன விவரங்கள் விண்ணப்பக் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்விண்ணப்பக் கையெட்டிளைச் சொடுக்கி (Click) பார்த்துக் கொள்ளலாம்.

3. கல்வித் தகுதி

1. தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பிற்குச் சேர்க்கை பெற விரும்புவோர் மேல்நிலைத் தேர்வில் (Higher Secondary)

தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும் மேலும், பொதுப்பிரிவினர் (OC) குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண் (500/1200-300/600) மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/ ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர் அருந்ததியர் / பழங்குடியினர் (BC / BCM / MBC/ SC / SCA / ST) பிரிவினர் குமறந்தபட்சம் 45 விழுக்காடு (540/1200 - 270/600) மதிப்பெள் பெற்றிருத்தல் வேண்டும். ii. விண்ணப்பதாரர் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் எந்த மொழிப் பாடப்பிரிவிற்கு (தமிழ் / ஆங்கிலம் / தெலுங்கு / உருது) விண்ணப்பிக்கின்றாரோ, அம்மொழியினை +2 வரை மொழிப்பாடத்தில் பகுதி ஒன்றிலோ அல்லது பகுதி இரண்டிலோ கட்டாயமாகப் பயின்றிருக்க வேண்டும்.

4. வயது வரம்பு

31.07.2022 அன்று அதிகபட்ச வயது 30-க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினத்தவர் மற்றும் மாற்றுத்திறளாளிகளுக்கு அதிகபட்ச வயது 35 ஆகும். ஆதரவற்றோர் (Orphans), கணவரால் கைவிடப்பட்ட பெண்டிர் மற்றும் விதவைகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும். கலப்புத் திருமணத் தம்பதியினரில் பொது பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 31.07.2022 அன்று அதிகபட்ச வயது வரம்பு 32 பற்றும் ஆதிதிராவிடர் / பழங்குடியினத்தவருக்கு 31.07.2022 அன்று அதிகபட்ச வயது 37 ஆகும்.

5. சிறப்பு இட ஒதுக்கீடு

மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படையீரரின் குழந்தைகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் ஆகியோருக்குச் சிறப்பு இட ஒதுக்கீடு உள்ளது. இதற்கான விவரம் இணையதளத்தில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. 6. விண்ணப்பங்கள் பதிவேற்ற வேண்டிய கடைசி நாள் விண்ணப்பத்தினை https://scert.tnschools.gov.in என்ற இணையதளத்தில் 09.07.2022 அன்று மாலை 05.00 மணிக்குள் உரிய கட்டணத்துடன் அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். 7. உதவி பெறும் மற்றும் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கை விவரம் நிதி உதவி | சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அந்தந்த நிறுவனங்களின் இணையதள முகவரியில் நளித்தனியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். நிதி உதவி/ சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் இணையதள முகவரி https://scert.tnschools.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் சோதனை கடந்து கரத்திரம் அடைந்தோம், சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்."

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.