நீட் தேர்வுக்கு தயாராகும் அரசுப்பள்ளி மாணவர்கள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 20, 2022

நீட் தேர்வுக்கு தயாராகும் அரசுப்பள்ளி மாணவர்கள்!

நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்

திருப்பூர் மாவட்ட அரசுப்பள்ளிகளில், பிளஸ் 2 மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் போதிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு &'நீட்&' தேர்வுக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதற்காக, தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலர், தங்கள் சொந்த செலவில், போட்டித்தேர்வு புத்தகங்களை வாங்கி மாணவர்களுக்கு உதவுகின்றனர்.

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், &'&'சில அரசுப்பள்ளிகளில், பொருளாதார நிலையில் பின் தங்கிய கிராமப்புற மாணவர்கள், படிப்பில் சிறந்து விளங்குகின்றனர். பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவியர் கண்டறியப்படுகின்றனர்.

அவர்கள் &'நீட்&' தேர்வை எதிர்கொள்ளும் வகையில் வினாத்தாள் மற்றும் போட்டித்தேர்வு புத்தகம் வரவழைக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்படுகிறது.

தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலர், இதற்கான பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். கவனமாக &'நீட்&' தேர்வுக்கு தயாராக வேண்டும். போட்டித்தேர்வு வினாத்தாளை கவனித்து, &'நீட்&' தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என, மாணவர்களை அறிவுறுத்தியும் வருகின்றனர்&'&' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.