இணைய வகுப்புகளுக்கு இடம்பெயர்ந்த மாணவர்கள் - நாளைய தலைமுறை நம்முடைய பொறுப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 20, 2022

இணைய வகுப்புகளுக்கு இடம்பெயர்ந்த மாணவர்கள் - நாளைய தலைமுறை நம்முடைய பொறுப்பு!

கல்லூரிச் சூழலில் வகுப்பில் ஒழுங்காகப் பாடங்களைக் கவனிக்காத, அடிக்கடி வகுப்புக்கு வராத ஒரு மாணவனைத் தனியாக அழைத்து “என்ன நடக்கிறது? ஏன் உன்னுடைய நடவடிக்கையில் இவ்வளவு மாற்றங்கள் தெரிகின்றன”? என்று கேட்டபோது, ‘‘சார், எனக்கே தெரியல. என்னுடைய நடவடிக்கை சரியில்லைதான். நான் ஏன் இப்படி நடந்துகொள்கிறேன்... தெரியல சார்? ஆனா, நானே நெனச்சாலும் என்னால மாற முடியல. வகுப்பறையில் முழுசா உட்கார முடியல. ஒரு அரை மணி நேரம் செல்போன் இல்லாம இருக்க முடியல” என்று வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டான். கரோனா ஊரடங்குக் காலத்தில் அளவுக்கு அதிகமான நாட்கள் வீட்டிலேயே இருந்ததால், இணைய வகுப்புகளுக்கு இடம்பெயர்ந்த மாணவர்கள் தங்களுக்கென்று தனி உலகத்தை அமைத்துக்கொண்டார்கள், அல்லது சமூக வலைதளங்கள் உருவாக்கி வைத்திருக்கும் இன்னொரு மெட்டா உலகத்துக்குள் பயணிக்க ஆரம்பித்தனர். அதிலிருந்து அவர்கள் இன்னும் வெளிவர முடியாமல் தவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.