அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து ஏப். 22 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்: இயக்குநர் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 20, 2022

அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து ஏப். 22 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்: இயக்குநர் அறிவிப்பு

Friday is observed weekly as Employment Friday at all District Employment Offices in Tamil Nadu to provide employment to unemployed youth in the private sector. Through this thousands of young people are getting employment in the private sector every week. All Employment Offices in Chennai are scheduled to hold a Private Sector Employment Camp on Friday 22.04.2022.

The employment camp is scheduled to be held from 10 a.m. to 2.00 p.m. The camp is open to anyone under the age of 30, 8th class, 10th class, plus 2, ITI, diploma, any degree (degree) in Arts, Science and Technology. More than 15 private sector companies are participating in the camp to recruit people for the job vacancies. Unemployed youth should take advantage of this opportunity, said Veera Raghava Rao, Director, Employment and Training.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் வாரந்தோறும் வெள்ளிக் கிழமையானது வேலைவாய்ப்பு வெள்ளி-ஆக அனுசரிக்கப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வாரந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணிநியமனம் பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து 22.04.2022 வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்தபட உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை - 32, கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 30-வயதிற்கு உட்பட்ட 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமா, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்;ய உள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.