TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்விற்கான இலவச பயிற்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 20, 2022

TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்விற்கான இலவச பயிற்சி

சென்னை, தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட தேர்வாணையங்களால் அறிவிக்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் (TNPSC - Combined Engineering Services) தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை, தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 25.04.2022 அன்று முற்பகல் 10.30. மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. இப்போட்டித்தேர்விற்கு Mechanical Engineering, Electrical Engineering, BE(Agri), B.Tech (Agricultural Engineering), Production Engineering, Automobile Engineering, Civil Engineering, Industrial Engineering, Structural Engineering, Mech and Production Engineering மற்றும் Chemical Engineering ஆகிய கல்வித்தகுதியுடைய பட்டதாரிகள் இப்போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையோராவர். இப்பயிற்சி வகுப்பில் (TNPSC - Combined Engineering Services) தேர்விற்கான பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதோடு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

எனவே, மேற்படி பயிற்சி வகுப்பில் போட்டித்தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் தங்கள் பெயர் மற்றும் கல்வித்தகுதியினை குறிப்பிட்டு peeo.chn@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 9499966028 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் அனுப்பி இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர்வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.