'வெகு சீக்கிரம் போய்விட்டார்' - வார்னே மரணம் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, March 4, 2022

'வெகு சீக்கிரம் போய்விட்டார்' - வார்னே மரணம் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

வெகு சீக்கிரம் போய்விட்டார்' - இவரது மரணம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே. இவருக்கு வயது 52. இவர் தாய்லாந்தில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உயிரிழந்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் மிக சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், 'ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னேவின் திடீர் மரணம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். வெகு சீக்கிரம் போய்விட்டார். உண்மையான மேதையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், கிரிக்கெட் உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.' என பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.