தமிழக பட்ஜெட்; எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு? முழு விபரம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 17, 2022

தமிழக பட்ஜெட்; எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு? முழு விபரம்

இன்று (மார்ச் 18) தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ரூ.36,895 கோடியும், மருத்துவத்துறைக்கு ரூ.17,901 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



துறை வாரியாக ஒதுக்கீடு விபரங்கள்:


* விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் தொல்பொருட்களை வைக்க ரூ.10 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
* சென்னை வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக முதல்கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு.
* சூப்பர் கம்ப்யூட்டர் உட்பட வானிலை மேம்பாட்டு பணிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.
* நவீன நட்பத்தில் நிபலங்களை அளவீடு செய்யும் வகையில், ரோவர் எந்திரங்களை வாங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.
* அரசு நிலங்களை பராமரிக்க சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


* நீர்நிலை பாதுகாப்பு, அரசு நிலங்களை மீட்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.
* கொற்கையில் ரூ.5 கோடியில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
* ஓய்வூதிய திட்டடங்ங்கள் ரூ.4816 கோடி நிதி ஒதுக்கீடு.
* 1 முதல் 10ம் வகுப்புகளுக்கு புத்தகங்கள் வாங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.
* நீர்வளத்துறைக்கு 7338.36 கோடி ஒதுக்கீடு.
* 64 அணைகளை புனரமைக்க ரூ.3384 கோடி ஒதுக்கீடு.
* சென்னை அரகே தாவரவியல் பூங்கா ரூ.300 கோடியில் அமைக்கப்படும்.
* சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும்.


* கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.1315 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* பேரிடர் மேலாண்மைத்துறை ரூ.7400 கோடி ஒதுக்கீடு.
* தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்காக ரூ.496 கோடி ஒதுக்கீடு
* சுய உதவிக்குழுக்களுக்கான கடன், விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்க ரூ.4130 கோடி ஒதுக்கீடு
* கூட்டுறவுத்துறைக்கு ரூ.13,176 கோடி ஒதுக்கீடு
* பொதுவிநியோக திட்டத்தின் கீழ் உணவு மானியமாக ரூ.7500 கோடி ஒதுக்கீடு.
* காவல்துறைக்கு ரூ.10,285 கோடி
* வட்டியில்லா பயிர்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
* வள்ளலார் கால்நடை பாதுகாப்பகங்கள் அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு.
* எம்ஜிஆர் சத்துணவு திட்டத்திற்கு ரூ.1949 கோடி ஒதுக்கீடு.
* சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்த ரூ.849.20 கோடி ஒதுக்கீடு.


* இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
* புதிதாக 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்படும். இதற்காக ரூ.1300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* புத்தக வாசிப்பை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் இலக்கிய திருவிழா என்ற பெயரில் ரூ.5.6 கோடியில் புத்தக காட்சி நடத்தப்படும்.
* வனப்பகுதியில் வரையாடுகளை பாதுகாக்க முதல்கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கீடு.
* பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.36,895.89 கோடி ஒதுக்கீடு.
* கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் முன்மாதரி பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு.
* தனியார் பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு.
* ‛நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக 5 லட்சம் மாணவர்களின் திறனை மேம்படுத்த ரூ.50 கோடி ஒதுக்கீடு.
* ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வகையில் பயிற்சி வழங்க ‛தமிழ்நாடு ஒழலம்பிக் தேடல்' திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு.
* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.293.26 கோடி ஒதுக்கீடு.
* புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட மைய நூலகங்கள் அமைக்கப்படும்.
* கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ப்புக்கு 50 கோடி ஒதுக்கீடு.
* அரசுக் கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கீடு.
* மருத்துவத்துறைக்கு ரூ.17901.23 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு.
* இலவச மிதிவண்டி திட்டத்திற்கு ரூ.162 கோடி ஒதுக்கீடு.
* மானிய விலையில் வீடு கட்டித்தரும் திட்டதிற்கு ரூ.4848 கோடி ஒதுக்கீடு.
* சட்டசபை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டங்களுக்கு ரூ.705 கோடி ஒதுக்கீடு.
* அம்ரூத் 2.0 திட்டத்திற்கு ரூ.2030 கோடி ஒதுக்கீடு.
* தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.2800 கோடி ஒதுக்கீடு.
* சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.