தமிழகம் முழுவதும் 25ம் தேதி முதல் பிளஸ் 1 வகுப்புக்கு செய்முறைத் தேர்வுகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 31, 2022

தமிழகம் முழுவதும் 25ம் தேதி முதல் பிளஸ் 1 வகுப்புக்கு செய்முறைத் தேர்வுகள்

தமிழகம் முழுவதும் 25ம் தேதி முதல் பிளஸ் 1 வகுப்புக்கு செய்முறைத் தேர்வுகள்: தேர்வுத்துறை அறிவிப்பு.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு 13ம் தேதி முதல் செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராமவர்மா நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடப்பதற்கு முன்னதாக செய்முறைத் தேர்வுகளை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நடத்த வேண்டும். 13ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலான நாட்களில் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து மாணவர்களுக்கான வெற்றுப் மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பொதுப் பிரிவு மற்றும் தொழில் கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் புதிய பாடத்திட்டத்தின்படி 25ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை நடத்த வேண்டும். செய்முறைத் தேர்வுக்க வராத மாணவர்களின் விவரங்கள் செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்களுடன் இணைத்து அனுப்ப வேண்டும். செய்முறைத் தேர்வுப்பணிக்கான பணியாளர்களை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதல்வர் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் மூலம் நியமித்துக் கொள்ள வேண்டும். உயிரியல் பாட செய்முறைத் தேர்வுகளுக்கான மதிப்பெண் பட்டியல்களில் இரண்டு பிரிவுகளாக பிரித்து உயரி-தாவரவியல், உயிரி-விலங்கியல் பாடங்களின் செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும். இயற்பியல் பாட செய்முறைத் தேர்வுக்கு சயின்டிபிக் கால்குலேட்டர்களை எடுத்துவர அனுமதிக்கலாம். செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து பெறப்பட்ட அனைத்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தேர்வுத்துறை இணைய தளத்தின் மூலம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேதிகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும். எந்த ஒரு மாணவரின் மதிப்பெண்களும் பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கக் கூடாது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.