வாலாஜாபாத் ஒன்றியம், வாரணவாசி ஊராட்சி தழையம்பட்டு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்துதர, பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேஷ்கண்ணா, ஊராட்சி மன்றதலைவர் பிரேமா மோகனசுந்தரத்திடம் கோரிக்கை வைத்தார். அதன்பேரில், ஊராட்சி மன்ற தலைவர், வாரணவாசி அளவூர் அருகே இயங்கும் தனியார் நிறுவனத்திடம் இருந்து, ரூ.3 லட்சத்தில் நாற்காலி, மேஜை ஆகியவற்றை பெற்று கொடுத்தார்.
இதனை, பள்ளிக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தனியார் நிறுவன பொதுமேலாளர் கதிரவன், கிருஷ்ணமூர்த்தி, தேவிதாசன்பாஸில், ஆனந்த், ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா மோகனசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஷ்கண்ணாவிடம், கல்வி உபகரணங்களை வழங்கினர். நிகழ்ச்சியில், துணைத்தலைவர் ஏகவள்ளி, முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Wednesday, March 30, 2022
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.