கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் நியமனம்: ஆளுநர் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 29, 2022

கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் நியமனம்: ஆளுநர் அறிவிப்பு

கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக டாக்டர் வி.கீதாலட்சுமியை நியமனம் செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் வி.கீதாலட்சுமி நியமிக்கப்படுகிறார்.

இவர், பதவி ஏற்ற நாள் முதல் மூன்று ஆண்டுகள் துணைவேந்தராக செயல்படுவார்.கற்பித்தல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் கொண்ட கீதாலட்சுமியின் வழிகாட்டுதலில் இதுவரை 14 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

இதையும் படிக்க | செல்போனில் பேச தடை: பள்ளி மாணவி தற்கொலை
இவரது முயற்சியால் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது.

மேலும் 3 புதிய வகை பயிர்கள் உருவாக்கம் மற்றும் 8 புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்தியதில் இவரது பங்களிப்பு இன்றியமையாதது. மேலும் இவர் 11 புத்தகங்களையும் மற்றும் 33 ஆராய்ச்சி திட்டங்களையும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் செயல்படுத்தியுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.