அம்பத்தூர், மேனாம்பேடு நேதாஜி தெருவை சேர்ந்தவர் அருண்குமார். ஆட்டோ டிரைவர். இவரது மகள் நிவேதா(17). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளிகள் 11ம் வகுப்பு படித்தார். இந்தநிலையில், நிவேதா தன்னுடன் படிக்கும் மாணவன் ஒருவருடன் அடிக்கடி செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதுபற்றி தெரியவந்ததும் தாய் தனலட்சுமி மகள் நிவேதாவை கண்டித்துள்ளதாக தெரிகிறது.நேற்று காலை வழக்கம்போல் அருண்குமார் ஆட்டோ சவாரிக்கு சென்றுவிட்டார்.
இதன்பிறகு தனலட்சுமியும் அவரது மகன் சஞ்சய்யும் அம்பத்தூர் மார்க்கெட்டுக்கு சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த நிவேதா தனது படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த சமயத்தில் வீட்டுக்கு வந்த தனலட்சுமி மகளை மீட்டு உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ‘’வரும் வழியிலேயே மாணவி நிவேதா இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.
Monday, March 28, 2022
New
செல்போனில் பேச தடை: பள்ளி மாணவி தற்கொலை
School student commits suicide
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.