அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளத முக்கிய அறிவிப்பு - திருப்புதல் தேர்வு தேதியில் மாற்றம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 7, 2022

அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளத முக்கிய அறிவிப்பு - திருப்புதல் தேர்வு தேதியில் மாற்றம்

பிப்ரவரி10 ஆம் தேதி அன்று நடைபெறவிருந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான திருப்புதல் தேர்வு ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறுவதையொட்டி பிப்ரவரி 17 ஆம் தேதி அன்று நடைபெறும்

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6 - 2021-2022-ஆம் கல்வியாண்டில் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வுகள் - 10.02.2022 அன்று நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு திருப்புதல் தேர்வு தேதி மாற்றம் குறித்த அறிவுரைகள் - தொடர்பாக.

பார்வை: 1. இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடிதம், நாள்:28.12.2021.

2. இதே எண்ணிட்ட செய்திக்குறிப்பு, நாள்.31.01.2022.

3.இவ்வலுவலக கடித ந.க.எண்.12/மந்தணம்/2021, நாள்.29.12.2021.

4.இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடிதம், நாள்: 31.01.2022.

2021-2022-ஆம் கல்வியாண்டில் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வுகள் முறையே 09.02.2022 முதல் 15.02.2022 மற்றும் 09.02.2022 முதல் 16.02.2022 வரை நடைபெறுமென ஏற்கனவே பார்வையில் 4-இல் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 10.02.2022 (வியாழக்கிழமை) அன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் அன்றைய தினம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு ஆங்கிலப் பாடத் திருப்புதல் தேர்வு 17.02.2022 (வியாழக்கிழமை) அன்று நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே, பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வுத்தேதி மாற்றம் குறித்த விபரத்தினை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் வாயிலாக அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அறியும்வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் படிக்க | இன்றைய கல்வி தொலைக்காட்சி வீடியோக்களின் தொகுப்பு - Kalvi Tv Videos 07.02.22

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.