SMC - பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு 2026 - 2028 கூட்ட நிகழ்வு - கையால் எழுதப்பட்ட அறிக்கை
பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு - 2026-2028
இடம்: குப்புத்தேவன் ஊ.ஒ.தொ. பள்ளி வளாகம்
நாள்: 12.09.2026
நேரம்: 10.00 to 1.00
தலைமை: திருமதி. A. லோகேஸ்வரி
முன்னிலை:
திருமதி. S. எலிசபெத்ராணி அவர்கள்
திரு. பத்மநாபன் அவர்கள்
திரு. தாமரைச்செல்வன் அவர்கள்
கூட்ட நிகழ்வுகள்:
மாநில திட்ட இயக்குநர் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி) அவர்களின் கடித ந.க.எண் -: 1338/B2/SMC/SS/2026, நாள்: 23.07.2026 படி 2026-2028 ஆம் ஆண்டிற்கான பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்புக் கூட்டம், குப்புத்தேவன் ஊ.ஒ.தொ. பள்ளியில் 12.09.26 அன்று சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியர் அவர்கள் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்புக் கூட்டத்திற்கு வருகை தந்த பெற்றோர்கள், ஊர்ப் பொதுமக்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
கூட்டத்திற்கு வருகை தந்த பெற்றோர்கள் அனைவரிடமும் பள்ளி உதவியாசிரியர்கள் மூலம் வகுப்பு வாரியாக படிவம்-1ல் கையொப்பம் பெறப்பட்டது.
குப்புத்தேவன் தொடக்கப்பள்ளியில் 2024-2026 ஆம் ஆண்டில் செயல்பட்டு வந்த பள்ளி மேலாண்மை குழுவானது கலைக்கப்பட்டு 2026-2028 ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான SMC மறுகட்டமைப்பு கூட்ட தொடங்கப்படுவதாக தலைமை ஆசிரியர் மூலம் தெளிவிக்கப்பட்டது.
பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்களால் SMC மறுகட்டமைப்பு முறைகள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றி விளக்கப்பட்டது.
பின்பு 2024-2026 ஆம் ஆண்டில் பொறுப்பில் இருந்த பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் செயல்பாடுகள் பற்றி கூறப்பட்டது. பிறகு அவ்வுறுப்பினர்கள் அனைவருக்கும் பள்ளித் தலைமையாசிரியர் அவர்களால் பொன்னாடை போர்த்தப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
உறுப்பினர்கள் தெரிவு செய்தல்:-
SMC மறுகட்டமைப்பின் தொடக்கமாக பள்ளி மேலாண்மைக் குழு முன்னாள் மாணவர் பெற்றோர் உறுப்பினர்களின் தேர்வுக்கு முன்மொழியவும் வழிமொழியவும் முன்வருமாறு பெற்றோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. திருமதி. R. செல்வப்பிரியா, திருமதி. A. சுகாயாணி, திருமதி. M. கார்த்திகா ஆகிய பெற்றோர்கள் முன்மொழியப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இவர்கள் மூவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பள்ளி மேலாண்மை குழு முன்னாள் மாணவர் (பொது) உறுப்பினர் தேர்வுக்கு திருமதி. கா. முத்துப்பிரியா அவர்கள் மட்டுமே முன்மொழியப்பட்டதால் அவர்களும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ITK தன்னார்வலர் / கல்வியாளர் உறுப்பினர் பதவிக்கு இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் செல்வி. க. கஜோனா அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் உள்ளாட்சி பிரதிநிதிகள் இரண்டு பணியிடங்கள் காலியிடங்களாக உள்ளதை தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்படுவர் என்பதையும் தெரிவிக்கப்பட்டது.
பள்ளி மேலாண்மை குழுவில் சுய உதவிக்குழு பெற்றோர் உறுப்பினராக திருமதி. P. பிரியா அவர்கள் முன்மொழியவும் வழிமொழியப்பட்டு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக பள்ளித் தலைமையாசிரியர் திரு. க. நாகராஜன் அவர்களையும், ஆசிரியர் பிரதிநிதியாக உதவி ஆசிரியர் திருமதி. க. உமையாள் அவர்களையும் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மீதமுள்ள 14 பள்ளி மேலாண்மைக் குழு பெற்றோர் உறுப்பினர்களை தேர்வு செய்ய பெற்றோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. திருமதிகள் M. காளீஸ்வரி, R. கீதா, யே. சுரோஜா குமாரி, S. ராகவி, K. சத்தியா, சு. பிரியா, S. காளீஸ்வரி, பா. மாரியம்மா, ம. ஷாலினி, P. பாலவிஜயா, R. சசிகலா, S. ஆனந்த பிரியா, S. தீபா, M. புவனாதேவி ஆகிய யார் முன்மொழியப்பட்டனர். இவர்கள் அனைவரும் (14 உறுப்பினர்கள்) போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
2026-2028 ஆம் ஆண்டின் புதிய பள்ளி மேலாண்மைக் குழு தலைவரை தேர்ந்தெடுக்க புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களை முன்மொழியவும் வழிமொழியவும் முன்வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. திருமதி. P. பாலவிஜயா அவர்களை முன்மொழியப்பட்டது. இவர்கள் 2026-2028 ஆம் ஆண்டின் பள்ளி மேலாண்மைக் குழு தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க உறுப்பினர்களை முன்மொழியவும் வழிமொழியவும் முன்வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. திருமதி. S. ஆனந்த பிரியா அவர்களை உறுப்பினர்கள் முன்மொழிந்தனர். இவர்கள் பள்ளி மேலாண்மை குழு துணைத் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மேற்கண்ட நிகழ்வுகள் SMC மறுகட்டமைப்பு கூட்ட பார்வையாளர் திருமதி. எலிசபெத் ராணி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. அனைத்து நிகழ்வுகளும் படிவம்-2, படிவம்-3, படிவம்-4, படிவம்-5, படிவம்-6, படிவம்-7 ல் பதிவு செய்யப்பட்டு உறுப்பினர்களிடம் கையொப்பம் பெறப்பட்டது. பின்னர் அனைத்து உறுப்பினர்களும் கட்டப்பேடேட்டில் கையொப்பமிட்டனர்.
2026-2028 ஆம் ஆண்டிற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் அனைத்து உறுப்பினர்களும் பள்ளித் தலைமையாசிரியர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
2026-2028 ஆம் ஆண்டிற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் சான்றிதழ் வழங்கப்பட்டது.
புதிய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நின்று குழு புகைப்படம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு பெற்றோர்கள் வருகையும் குழு புகைப்படமும் EMIS - இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டது.
இறுதியாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரையும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பள்ளி உதவியாசிரியர் திருமதி. கா. சோபனா அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
கல்வித்துறை மற்றும் அரசுப் பணிகள் குறித்த உடனுக்குடனான செய்திகளைப் பெற நமது தளத்தைத் தொடர்ந்து பின்தொடருங்கள்!
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.