மாணவர் சேர்க்கை குறைந்தாலும் அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் உறுதி
மாணவர் சேர்க்கை குறைந்தாலும், அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெறும் 11-ம் கட்ட அகழாய்வு பணியையும், திறந்தவெளி அகழ் வைப்பகத்தையும் பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
முந்தைய ஆட்சிகளில் தொடங்கப்பட்ட அனைத்து நல்ல திட்டங்களையும் தவெக அரசு நிறுத்தாது. அதில் இருக்கும் குறைகள் சரி செய்யப்பட்டு மேம்படுத்தப்படும். பழிவாங்கும் அரசியல் எங்களிடம் இல்லை. கீழடி மட்டுமின்றி அகரம், கொந்தகை உள்ளிட்ட இடங்களிலும் அகழாய்வுகள் நடைபெறுகின்றன.
மேலும், தேவையான அறிவியல் சான்றுகளைத் தாக்கல் செய்து கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட, இந்திய தொல்லியல் துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
கட்டண விவரங்களை வெளியிடாதது குறித்து புகார் வந்த பள்ளிகளுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலித்து விதிகளை பின்பற்ற வேண்டும்.
மாணவர் சேர்க்கை குறைந்தாலும், அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை. வீடு, வீடாகச் சென்று அறிவுறுத்தி மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும். தமிழகத்தில் காமராஜர் ஆட்சிதான் தொடர்கிறது. அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
மத்திய வெளியுறவுத் துறையிடம் சட்டப்பூர்வ அனுமதி பெற்றுத்தான் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டோம். இதில் எந்த சட்டவிரோதமும் இல்லை. கட்சியில் இணையம் அனைவரையும் அரவணைத்துச் செல்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சமணர் கல்வெட்டுகள்
இதனிடையே, மதுரை மாவட்டம் மாங்குளம் அருகேயுள்ள மீனாட்சிபுரம் மலையில் கி.மு. 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் படுக்கை, தமிழ் பிராமி எழுத்துகள் பொறித்த கல்வெட்டுகளை அமைச்சர் பார்வையிட்டார். கல்வெட்டுகளின் காலகட்டம், வரலாற்று முக்கியத்துவம், பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு விழுமியங்கள், பொக்கிஷங்களை தமிழ்நாடு முழுவதும் மேம்படுத்த ஆய்வு செய்கிறோம். இதுபற்றி முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இதன்மூலம் தொல்லியல் பொக்கிஷங்களை பாதுகாத்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கீழடி தமிழர்களுக்கு மட்டுமின்றி உலக நாகரிகத்துக்கும் பெரிய தாய்மடியாகும். பத்திரிகையாளர்கள் நலம் சார்ந்த திட்டங்கள் தனிமனித தலையீடு இன்றி நிறைவேற்றப்படும். பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சீருடை மாற்றம் குறித்த அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார். No Intention to Close Government Schools Even If Student Enrollment Drops School Education Minister Rajmohan Assures
School Education Minister Rajmohan stated that there is no intention to close government schools even if student enrollment decreases.
Speaking to reporters after inspecting the 11th phase of excavation work and the open-air site museum at Keeladi near Thirupuvanam in Sivagangai district, he said:
The TVK government will not halt any good schemes launched during previous regimes. Flaws in them will be rectified and improved. We do not indulge in vindictive politics. Apart from Keeladi, excavations are also underway in places like Agaram and Konthagai.
Furthermore, talks will be held with the Archaeological Survey of India (ASI) to release the Keeladi excavation results after submitting the required scientific evidence.
District Education Officers have issued warnings to schools that faced complaints for failing to disclose fee details. Private schools must adhere to regulations and collect only the fees fixed by the government.
Even if student enrollment declines, there are no plans to shut down government schools. Enrollment will be increased through door-to-door awareness campaigns. Kamarajar’s rule continues in Tamil Nadu. The breakfast scheme in government schools will be expanded.
Our foreign visit was undertaken only after obtaining legal permission from the Ministry of External Affairs. There was nothing illegal about it. We will embrace everyone who joins the party, he added.
Jain Inscriptions
Meanwhile, the Minister inspected the 3rd-century BC Jain beds and Tamil-Brahmi inscriptions on the Meenakshipuram hill near Mangkulam in Madurai district. He inquired with officials regarding the period, historical significance, and preservation measures of the inscriptions.
Later, the Minister informed reporters:
We are conducting studies across Tamil Nadu to enrich the Tamil language, art, literature, cultural values, and heritage treasures. A report on this will be submitted to the Chief Minister, following which action will be taken to protect and enhance archaeological treasures.
Keeladi is a major cradle not just for Tamils, but for global civilization. Journalist welfare schemes will be implemented without individual political interference. A report on changing school uniforms for students has been submitted to the Chief Minister, and a decision will be taken soon.


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.