தூத்துக்குடி பனிமய மாதா பேராலயப் பெருவிழா: ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
தூத்துக்குடி மாவட்டம்
காரணம்: தூத்துக்குடி தூய பனிமய மாதா திருத்தலப் பேராலயப் பெருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது.
விவரங்கள்:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும்.
கருவூலம் மற்றும் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் அலுவலகங்கள் குறைந்தபட்சப் பணியாளர்களுடன் இயங்கும்.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வழக்கமாக அடுத்தடுத்து வரும் ஏதேனும் ஒரு சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படும்
தூத்துக்குடி தூய பனிமய மாதா திருத்தலப் பேராலயப் பெருவிழாவை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார். தூத்துக்குடி தூய பனிமய மாதா திருத்தலப் பேராலயப் பெருவிழா - 2026 வருகிற 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறதி. விழாவின் நிறைவு நாள் ஆகஸ்ட் 5ஆம் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு 05.08.2026 புதன்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறையானது செலாவணி முறிச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 05.08.2026 அன்று அரசுத் தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், தொடர்புடைய பணியாளர்களுக்கும், அத்தியாவசியப் பணிகளுக்கும் இந்த விடுப்பு பொருந்தாது.
மாவட்டக் கருவூலம், சார்நிலை கருவூலங்கள் குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு வழக்கம் போல் செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக, வரும் 08.08.2026 இரண்டாவது சனிக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் வழக்கமான அலுவலக வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.