பள்ளியில் விஜய் நிகழ்ச்சி ஒளிபரப்பு - மேலும் ஒரு தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்' - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 12, 2026

பள்ளியில் விஜய் நிகழ்ச்சி ஒளிபரப்பு - மேலும் ஒரு தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்'



Event: A public meeting involving Chief Minister Vijay was broadcast in schools.

Consequence: Headmistresses at schools in Karur district were suspended following the broadcast.

Location: The events took place in the Karur district of Tamil Nadu

Authority: The suspensions were ordered by the Karur district education officer.

பள்ளியில் விஜய் நிகழ்ச்சி ஒளிபரப்பு மேலும் ஒரு தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்'

சென்னை, ஜூலை 12-

முதல்வர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை, பள்ளியில் ஒளிபரப்பு செய்த மேலும் ஒரு தலைமை ஆசிரியை, ''சஸ்பெண்ட்' செய்யப் பட்டு உள்ளார்.

த.வெ.க., பிரசார கூட்டத்தில் உயிரி ழந்த குடும்பத்திற்கு அரசு வேலை வழங் குதல் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, கரூ ரில் நேற்று முன்தினம் நடந்தது.

முதல்வர் விஜய் பங்கேற்ற இந்நிகழ்ச்சி, சில அரசு பள்ளிகளில், 'டிவி'யில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு தரப் பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, கரூர் மாவட்டம், கிருஷ்ண ராயபுரம் ஊராட்சி ஒன் றிய பள்ளி தலைமை ஆசிரியை மல்லிகா, நேற்று முன்தினம், 'சஸ்பெண்ட்' செய்யப் பட்டார்.

அதேபோல், கிருஷ் ணராயபுரம் பகுதியில், மகாதானபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியிலும், முதல் வர் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது தெரி யவந்தது. இதனால், அப்பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வ ரியை, 'சஸ்பெண்ட்' செய்து, கரூர் மாவட்ட கல்வி அலுவலர் சண் முகவேல் உத்தரவிட் டுள்ளார்.



அரசு பள்ளியில் தவெக நிகழ்ச்சி ஒளிபரப்பு

இன்னொரு ஹெட்மாஸ்டர் சஸ்பெண்ட்

பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை

சென்னை, ஜூலை 12: அர சுப் பள்ளிகளில் முதல்வர் விஜய்யின் கரூர் பேச்சு சில அரசு பள்ளிகளில் ஒளிபரப்பப்பட்டது. இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட அறிக்கையில், "அரசுப்பள் ளிகளில் அரசியல் நிகழ்ச் சிகளுக்கு இடமில்லை. உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி, அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி களை தவிர, எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சியை யும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு காட்டக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை ஏற்கனவே தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது.

இந்த உத்தரவை மீறி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராய புரம் ஊராட்சி ஒன்றியத் திற்கு உட்பட்ட பள்ளி யில் தவெக நிகழ்ச்சியை நேரலை செய்து மாணவர் களுக்கு திரையிட்ட சம்ப வம் தவறு. பள்ளித் தலை மையாசிரியர் மல்லிகா தன்னிச்சையாக முடிவு எடுக்க உத்தரவிடப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என தெரிவித்திருந்தார். செய்து, இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதி செய் யப்பட்டது. இதனைய டுத்து, அவர் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை

இந்தச் சூழலில், விஜய் யின் உரையைப் பள்ளி வகுப்பறைகளில் மாணவர் களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்த புகாரில் மேலும் ஒரு தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார். கரூர் மாவட் டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், மகாதானபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியின் தலைமை ஆசிரியர்ராஜேஸ்வரியை பள்ளிக் கல்வித்துறையின் தேதியிட்ட சுற்றறிக்கைக்கு முரணாகச் செயல்பட்டது மற்றும் பணி தவறு ஆகிய கடுமையான குற்றச்சாட் டுகள் தொடர்பாக, அரசு கொள்கைகளுக்கு எதிரா கச் செயல்பட்ட காரணத் தினால் பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத் துள்ளது.

Headmaster Suspended: A headmaster in Karur district was suspended for broadcasting a speech by actor Vijay to students in a school.

Government Action: The School Education Minister announced that this action violated directives prohibiting political activities in government schools.

Specific Incident: The suspension occurred at a panchayat union middle school in Krishnarayapuram, where the headmistress willfully displayed the speech.

Official Directive: The Department of Education has reiterated that only official events are allowed on school premises, and political content is strictly forbidden

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.