வெற்றிப் பள்ளிகள் செயல்பாடுகள் கண்காணிப்பு - பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 22, 2026

வெற்றிப் பள்ளிகள் செயல்பாடுகள் கண்காணிப்பு - பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை



வெற்றிப் பள்ளிகள் செயல்பாடுகள் கண்காணிப்பு - பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை

வெற்றிப் பள்ளிகள் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான இணையவழி ஆய்வுக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

இதில் வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் மூலம் வட்டாரங்கள் வரை உள்ள அரசுப் பள்ளி மாணவர்களிடையே போட்டித் தேர்வுகள், உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு சிறப்பாக ஏற்படுத்தப்பட்டு வருவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் கூடுதல் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன. அதன்படி வெற்றிப் பள்ளித் தலைமையாசிரியர்களுடன் மாதந்தோறும் இணைய வழியில் ஆய்வுக் கூட்டம் நடத்தி பள்ளிகளின் செயல்பாடுகள், கற்பித்தல் முன்னேற்றம் ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

ஒவ்வொரு சனிக்கிழமை பயிற்சி வகுப்புக்குப் பின்பும் மாணவர், ஆசிரியர் வருகை, கற்பிக்கப்பட்ட பாடப்பகுதிகள், சிறப்பு செயல்பாடுகள் மற்றும் எதிர்கொண்ட சவால்கள் தொடர்பான விவரங்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் பெற்றுத் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.

மாதிரிப் பள்ளிகளால் மதிய உணவு வழங்கப்படாத வெற்றிப் பள்ளிகளில் தலைமையாசிரியர்களுடன் கலந்தாலோசித்து மாணவர்களுக்குத் தரமான மதிய உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

This Tamil newspaper clipping details new directives for monitoring school activities to improve educational standards.

The School Education Department has ordered intensified monitoring of school operations, specifically focusing on activities related to the "Vetripalli" (Success Schools) project.

District Chief Educational Officers are instructed to hold monthly online review meetings with headmasters to assess teaching progress and overall school performance.

The directives emphasize ensuring the quality of midday meals provided to students and coordinating information regarding student attendance, curriculum completion, and extracurricular challenges.


வெற்றிப் பள்ளிகள் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இனை இயக்குநரின் செயல்முறைகள்!

முதன்மைக் கல்வி 13-07-2026 அன்று அனைத்து மாவட்ட அலுவலர்களுடனான இணையவழி மீளாய்வுக் கூட்டம் இணை இயக்குநர் (தொழிற்கல்வி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் மூலம் வட்டாரங்கள் வரை உள்ள அரசுப் பள்ளி மாணவர்களிடையே போட்டித் தேர்வுகள், உயர்கல்வி வாய்ப்புகள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு சிறப்பாக ஏற்படுத்தப்பட்டு வருவது எடுத்துரைக்கப்பட்டது. இத்திட்டத்தை மாவட்ட அளவில் சிறப்பாகச் செயல்படுத்தி வரும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

மேலும், வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் பின்வரும் வழிகாட்டுதல்கள் அறிவுறுத்தப்பட்டு வழங்கப்பட்டன. அவற்றின்படி தேவையான நடவடிக்கைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வெற்றிப் பள்ளித் தலைமையாசிரியர்களுடன் மாதந்தோறும் இணையவழி மீளாய்வுக் கூட்டம் நடத்தி, வெற்றிப் பள்ளிகளின் செயல்பாடுகள், மாணவர் வருகை. ஆசிரியர் பங்கேற்பு மற்றும் கற்பித்தல் முன்னேற்றம் ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

ஒவ்வொரு வாரமும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துத் வெற்றிப் பள்ளிகளிலும் பயிற்சி வகுப்புகள் திட்டமிட்டபடி தடையின்றி நடைபெறுவதைத் தொடர்ந்து பார்வையிட்டு உறுதி செய்ய வேண்டும். . சனிக்கிழமை பயிற்சி வகுப்புகளுக்காக ஆர்வமிக்க மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களை நியமித்து. ஒவ்வொரு புதன்கிழமையும் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுடன் இணையவழிக் கூட்டம் நடத்தி, அவர்களின் பங்கேற்பு மற்றும் பாடத்திட்டத் தயார்நிலையை முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும்.

👇👇👇

CLICK HERE TO DOWNLOAD DSE - Vetri Palligal - Minutes of the Meeting PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.