பள்ளி விழாவில் விதிமீறல் கூடாது கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, July 11, 2026

பள்ளி விழாவில் விதிமீறல் கூடாது கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை!!



This news clipping outlines strict guidelines for school events to prevent violations, specifically mentioning that non-educational or politically inclined meetings are prohibited within school premises. Key details from the article include:

Educational Focus: Schools must only organize educational activities and not allow political or unrelated meetings on campus.

Activity Restrictions: Events that distract from learning, such as unauthorized rehearsals or celebrations that distribute gifts/food, are prohibited.

Safety and Consent: Schools must obtain written consent from parents before involving students in any outside activities or events.

பள்ளி விழாவில் விதிமீறல் கூடாது கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை திருப்பூர், ஜூலை 12-

பள்ளிகளில் என் னென்ன நிகழ்ச்சி நடத்த வேண்டும், எந்த நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்பது குறித்த வழி காட்டுதல்களை பள்ளி கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு: அரசியல், கல்வித் துறை சாராத, பிரிவி னைவாத மற்றும் கல்வி நோக்கமற்ற நிகழ்ச்சிகள் கூட்டங்கள், பிரசா ரங்கள் ஆகியவற்றை நடத்த பள்ளி வளாகத் தைப் பயன்படுத்தக் கூடாது. கல்வி சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி இணை செயல்பா டுகள் மட்டுமே நடத்தி, அனைத்து மாணவர்க ளின் ஒட்டு மொத்த கல்வி வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்.

வகுப்பறை, சுலைய ரங்குகள், விளையாட்டு மைதானங்கள் அல்லது திறந்த வெளியில் மாண வர் ஒருங்கிணைத்தோ அல்லது வெளிநபர்க ளால் துறை சாராமல் நடத்தப்படும் ஒத்திகை கள், அணி வகுப்புகள் தேவையற்ற செய்தி களைப் பரப்ப அனும திக்க கூடாது. அரசால் நடத்தப்படும் அறிவிக் கப்படும் தலைவர்கள் பிறந்த நாள் விழா மட் டும் நடத்த வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறை களை தவிர, விதிமீறல்கள் இருக்க கூடாது.

உணவு மற்றும் பரிசுப் பொருள் கள் வழங்குவதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். பள்ளியில் நடக்கும் கொண்டாட் டம், விழாக்களில் பள்ளி மாணவ, மாணவியரை பங்கேற்க செய்ய பெற் றோரிடம் கட்டாயம் ஒப் புதல் பெற வேண்டும். இந்த அறிவுரைகளை எவ் வித சுணக்கமும் இன்றி பின்பற்ற வேண்டும்.

மீறு வோர் மீது துறைரீதியான நடவடிக்கை உடனடி எடுக்கப்பட்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட, முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் கூறுகையில், "பள்ளி கல்வி இயக்குனரகத்தின் உத்தரவுகள் அனைத்து பள்ளி முதல்வர் மற்றும் தலைமை ஆசிரியர்க ளுக்குதெரிவிக்கப்பட் டுள்ளது. பள்ளிகளில் நடத்தப்படும் நிகழ்ச்சி கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும்," என்றார்.


Only academic and co-curricular activities should take place in schools – School Education Department issues detailed guidelines! பள்ளிகளில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகள் மட்டுமே நடைபெற வேண்டும் - பள்ளிக் கல்வித் துறையின் விரிவான அறிவுரைகள் வெளியீடு!

தமிழ்நாடு பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள், சென்னை-6. ந.க.எண்.5923/அ1 /2026, நாள். 10.07.2026.

பொருள்: பள்ளிக் கல்வி பள்ளிகளில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகள் மட்டுமே நடைபெற வேண்டும் அறிவுரை வழங்குவது - தொடர்பாக.

பார்வை:

பள்ளிகளுக்கு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் பத்திரிக்கை செய்தி நாள். 09.07.2026.

*****

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 57,671 பள்ளிகளில் 1,03,98,748 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இம்மாணவர்கள், பல்வேறு சமூக பொருளாதார நிலைகளில் இருந்து பள்ளிக்கு வருகின்றனர். மாணவர்களிடையே எவ்வித பாகுபாடு எண்ணங்களின்றி ஒற்றுமை உணர்வுடன் மன அழுத்தங்களைத் தவிர்த்து கல்வி கற்று வருகின்றனர். மாணவர்களிடையே பிளவையும், பாகுபாடான எண்ணங்களையும் ஏற்படுத்தாத வகையில் இளம் மனதில் சாதி, மத, அரசியல் சார்புகளின்றி முழுமையான கல்வியை அளிப்பதே கல்விக் கூடங்களின் முதன்மையான நோக்கம் ஆகும். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை விதிகளின்படி அரசியல், வகுப்புவாத, பிரிவினைவாத மற்றும் கல்வி நோக்கமற்ற நிகழ்ச்சிகள், கூட்டங்கள், பிரச்சாரங்கள் பள்ளி ஆகியவற்றை நடத்த வளாகத்தைப் பயன்படுத்த கூடாது என் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகள் மட்டுமே நடத்துவதன் மூலம் மாணவர்களின் ஒட்டுமொத்த கல்வி வளர்ச்சியினை உறுதி செய்ய இயலும். ஆனால், பள்ளிக் கல்வியின் நோக்கத்தை சீர்குலைக்கும் வகையில் சமீப காலங்களில் பள்ளி வளாகத்தை சாதி, மத, அரசியல் ரீதியான அடையாளங்களுடன் சிலர் பயன்படுத்தி வருவதாக தெரிய வருகிறது. இது மாணவர்களின் இளம் மனதில் அரசியல் சார்புகளை ஏற்படுத்தி பிரிவினையைத் தூண்டுவதாகவும், சில நேரங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும், அதன் காரணமாக மாணவர்களை மன அழுத்தத்திற்கு உட்படுத்துவதாகவும் உள்ளது.

எனவே, பள்ளிகளில் சாதி, மத, அரசியல் சார்ந்த நிகழ்வுகளைத் தவிர்ப்பது மாணவர்களின் பாதுகாப்பையும், ஒற்றுமையையும் வலுப்படுத்துவதாகவும் அமையும். எனவே, பின்வரும் செயல்பாடுகளை அனைத்துவகைப் பள்ளிகளிலும் தவறாமல் பின்பற்றுமாறு தெரிவிக்கப்படுகிறது.

1. பள்ளி வளாகங்கள் கல்வியின் முக்கியத்துவத்தை பேணிக்காக்கும் இடமாகவும், இனிமையான கற்றல் கற்பித்தல் சூழ்நிலை கொண்டதாகவும், மாணவர்களின் எதிர்கால இலட்சியங்களை நிறைவேற்றக் கூடிய இடமாகவும் இருக்க வேண்டும்.

2. பள்ளி வளாகங்களை கல்விசாராத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது. 3. வகுப்பறைகள், கலையரங்குகள், விளையாட்டு மைதானங்கள் அல்லது திறந்த வெளியில் மாணவர்களை ஒருங்கிணைத்தோ அல்லது வெளிநபர்களால் துறை சாராமல் நடத்தப்படும் ஒத்திகைகள், அணி வகுப்புகள் அல்லது வகுப்புவாதம் சார்ந்த செய்திகளைப் பரப்புதல் மற்றும் விழா நடத்துதல் போன்றவை பள்ளி வளாகங்களில் கட்டாயம் அனுமதிக்கக் கூடாது.

4. அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் அறிவிக்கப்படும் தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களுக்கான நடைமுறைகளைத் தவிர பிற தலைவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஏதும் பள்ளி வளாகத்தில் நடத்திடவோ அல்லது அவ்விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லவோ பங்குபெற அனுமதிக்கவோ கூடாது. மேலும், இது சார்ந்த கொண்டாட்டங்கள் தொடர்பாக விளையாட்டுப் போட்டிகள், மருத்துவ முகாம்கள். கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்தவிதமான நிகழ்ச்சிகளையும் எந்த வடிவத்திலும் பள்ளி வளாகத்தில் நடத்தக் கூடாது. மேலும், உணவுப் பொருட்கள். பரிசுப் பொருள்கள் வழங்குவதையும் முற்றிலும் தவிர்த்தல் வேண்டும்.

மேற்கண்ட அறிவுரைகளை எவ்வித சுணக்கமும் இன்றி பின்பற்றுமாறு சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குத் (இடைநிலை), (தொடக்கக் கல்வி), (தனியார் பள்ளிகள்) தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD DSE, DEE & DPS Co-Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.