பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை 2026 நுழைவு சீட்டு (Hall Ticket) பதிவிறக்கம் செய்தல் மற்றும் அறிவியல் பாட செய்முறை தேர்வு சார்ந்து - DGE செய்திக்குறிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 1, 2026

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை 2026 நுழைவு சீட்டு (Hall Ticket) பதிவிறக்கம் செய்தல் மற்றும் அறிவியல் பாட செய்முறை தேர்வு சார்ந்து - DGE செய்திக்குறிப்பு



பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை 2026 நுழைவு சீட்டு (Hall Ticket) பதிவிறக்கம் செய்தல் மற்றும் அறிவியல் பாட செய்முறை தேர்வு சார்ந்து - DGE செய்திக்குறிப்பு

This is a notice regarding the July 2026 SSLC Supplementary Exam Hall Ticket download.

Private candidates can download hall tickets from www.dge.tn.gov.in starting July 2, 2026.Practical exam details for science subjects are available for candidates registered on July 3 and 4, 2026.

For questions, contact the department at 9498383075 or 9498383076.

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6

ஜூலை-2026 பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்தல் மற்றும் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு செய்திக்குறிப்பு

நடைபெறவுள்ள ஜூலை-2026 பத்தாம் வகுப்பு துணைத்தேர்வெழுத விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) 02.07.2026 (வியாழக்கிழமை) முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று "HALL TICKET" என்ற வாசகத்தினை *Click" செய்த பின்னர் தோன்றும் பக்கத்தில், விண்ணப்ப எண் (APPLICATION NUMBER) அல்லது நிரந்தரப்பதிவெண் (PERMANENT REGISTER NO) (DATE OF BIRTH) क्री செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களுக்கு 03.07.2026 (வெள்ளிக்கிழமை) மற்றும் 04.07.2026 (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் அறிவியல் UTL செய்முறைத்தேர்வு நடைபெறவுள்ளது. செய்முறைத் தேர்வு நடத்தப்படவுள்ள பள்ளிகளின் விவரங்களை, செய்முறைப் பயிற்சி பெற்ற மையம் / சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை) அலுவலகங்கள் / அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலங்களில் அறிந்துகொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

அறிவியல் செய்முறைப் பயிற்சி பெற்று ஜூலை-2026 தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் தேர்வர்கள் மட்டுமே செய்முறைத்தேர்விற்கு அனுமதிக்கப்படுவர்.

தேர்வர்கள் தேர்வுக் கூட அனுமதி சீட்டினைப் பதிவிறக்கம் செய்தபின்னர் தாங்கள் தேர்வெழுத வேண்டிய பாடங்கள் மற்றும் தேர்வு நடைபெறும் நாட்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், தேர்வர்கள் தேர்வு மற்றும் தேர்வுக் கூட அனுமதி சீட்டினைப் பதிவிறக்கம் செய்வது தொடர்பான சந்தேகங்களுக்கு 9498383075 / 9498383076 என்ற கைப்பேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.