This image shows a Tamil news report detailing a tragic crime incident involving a student in Sivakanga district.
The report discusses a fatal incident involving a 10th-grade student.Police have begun investigations into the circumstances surrounding the event.
The incident has prompted reactions from local authorities and the community.
10ம் வகுப்பு மாணவர் படுகொலை பள்ளி திறந்த நாளிலேயே நடந்த கொடூரம்
கீழச்சிவல்பட்டி, ஜூன் 6-
சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் ஒன்றியம் கீழக்காவினிப்பட்டி கண் மாயில் போதையில் நண் பர்களே 10ம் வகுப்பு மாண வரை கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர். வயதில் மூத்த நண்பர்களுடன் மது அருந்த சென்ற மாணவர் பள்ளி திறந்த நாளிலேயே கொலையானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்புத்துார் ஒன்றியம் காரையூரைச் சேர்ந்த நாக ராஜன் மகன் அஸ்வின் 15. இவர் திருக்களாப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10ம் வகுப்புக்கு தேர் வாகியுள்ளார். நேற்று முன் தினம் பள்ளி திறந்தன்று காலை சீருடையுடன் வீட்டி லிருந்து சென்றார். மாலை வீடு திரும்பவில்லை. அவர் பள்ளிக்கு செல்லாததும் தெரியவந்தது.
நேற்று முன்தினம் இரவு காரையூரைச் சேர்ந்த பாலி டெக்னிக் மாணவர் மாணவர் அஜய் 17, திருப்புத்துார் போலீசா ரிடம் அஸ்வின் கழுத்தறுக் கப்பட்டு இறந்த நிலையில் கண்மாயில் கிடப்பதாக தெரி வித்தார். இரவே அஜய்யை இடத்தை காண்பிக்கும் படி போலீசார் கூறினர். ஆனால் அவர் போதையில் இருந்ததால் இரவு சரியான இடத்தை காட்ட முடிய வில்லை.
நேற்று காலை மீண்டும் போலீசார் அஜயுடன் சென்று கீழக்காவிணிப்பட்டி கண் மாயில் அஸ் வின் இறந்து கிடந்ததை கண் டுபிடித்தனர். எஸ்.பி.சிவபி ரசாத், டி.எஸ். பி., செல்வகு மார் யங்கள் சேகரிக் கப்பட்டன. மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இடத்தை பார்வையிட்ட னர். விரல்ரேகை உள்ளிட்ட தட போலீசார் கூறியதாவது:
நேற்று முன்தினம் காலை பள்ளி சென்ற அஸ்வினு டன் இலந்தமங்கலத்தைச் சேர்ந்த அரவிந்த் 25, காரை யூர் கணேசன் 22, அஜய் 17, ஆகியோர் திருக்களாப்பட்டி மதுக்கடைக்கு சென்று மது வாங்கினர். பின் காரையூரில் மது அருந்தியுள்ளனர். நல் லிப்பட்டிக்கண்மாய் வழி யாக கீழக்காவிணிப்பட்டி கண்மாய்க்கு அவர்கள் வந் தனர். அங்கு நடந்த தகரா றில் துண்டால் அஸ்வின் கழுத்தை நெரித்து சிறு கத் தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
பின் அஜய்யை திருப்புத் துாரில் விட்டு சென்றுள்ள னர். இவர்களுக்குள் என்ன முன் விரோதம் என தெரிய வில்லை.
அஸ்வினின் பாட்டி இலந் தமங்கலத்தைச் சேர்ந்தவர் என்ப தால் அப்பகுதி அரவிந்த் உடன் பழக்கம் ஏற்பட் டுள்ளது. இவர்கள் விடுமுறை நாட் களில் சேர்ந்து மது குடிப்பதுண்டு. அஸ்வினை அவர் கள் பள்ளிக்கும் அழைத்து சென்று விடுவர். அஜய்யிடம் விசா ரணை நடக்கிறது. அரவிந்த் உள்ளிட்டோரை கைது செய் தால் மட்டுமே கொலைக் கான உண்மையான கார ணம் தெரிய வரும் என்றனர். பள்ளி திறந்த நாளிலேயே பத்தாம் வகுப்பு மாண வர் போதை சகவாசத்தால் கொலையானது பெற்றோர் களை பதற வைத்துள்ளது.
அஸ்வின் சக ஜூன் 4ல் குண்டேந்தல் பட்டி பகுதி நான்கு வழிச் சாலைப்பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளி ஒருவர் போதையில் இருந்த தொழிலாளிகளால் கொல்லப் பட்ட 2 நாட்களில் போதைந பர்களால் மாணவர் கொலை செய்யப்பட்டுள்ளார்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.