TET மீதான தீர்ப்பால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி - மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர கோரிக்கை Teachers Express Severe Dissatisfaction Over TET Verdict — Demand Central Government Enact an Ordinance
'டெட்' மீதான தீர்ப்பால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி - மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர கோரிக்கை
'டெட்' மீதான தீர்ப்பால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி
மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர கோரிக்கை
திருச்சி, ஜூன் 1-
தேசிய ஆசிரியர் சங் கத்தின் தமிழக பொதுச் செயலாளர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்ப தாவது:
ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) தொடர் பான மறுஆய்வு மனு மீது சுப்ரீம்கோர்ட் வழங்கிய தீர்ப்பால் ஏற் பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்து தேசிய ஆசிரியர் சங்கம் கவலையும், வேதனை யும் அடைந்துள்ளது.
இத்தீர்ப்பு,பலஆண்டு களாக அர்ப்பணிப்புட னும் நேர்மையுடனும் பள்ளிகளில் பணியாற்றி வரும் நாடு முழுவதிலு முள்ள லட்சக்கணக்கான ஆசிரியர்களிடையே பர வலான அதிருப்தியை யும், கடுமையான மன உளைச்சலையும் ஏற்ப டுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட ஆசிரி யர்கள், நடைமுறையில் உள்ள அரசு விதிகள் மற்றும் அறிவிப்புகளின் கீழ் தகுதிவாய்ந்த அதி காரிகளால் நடத்தப்பட்ட
உரிய நடைமுறைகளை பின்பற்றி நியமிக்கப்பட் டனர். அவர்களில் பலர் கிராமப்புற, நகர்ப்புற மற்றும் பின்தங்கிய பகு திகளில் உள்ள மாணவர் களுக்கு சேவை செய்து, கல்வி முறையை வலுப் படுத்துவதற்காக தங்கள் வாழ்வின் பொன்னான ஆண்டுகளை அர்ப்பணித் துள்ளனர்.
பல ஆண்டுகள் பணி யாற்றியிருந்த போதிலும், தற்போதைய சட்ட நிலை காரணமாக லட்சக்கணக் கான ஆசிரியர்கள் ஈடு செய்ய முடியாத பாதிப் புக்கு உள்ளாகக்கூடும். அவர்களின் பணி நிலை மைகள் குறித்த திடீர் நிச் சயமற்ற தன்மையானது, பள்ளிகளின் செயல்பாட் டையும் ஒட்டுமொத்த கல்வி சூழலையும் மோச மாகப் பாதிக்கும். இப் பிரச்னை மனிதாபிமான மற்றும் நிர்வாகத் தன்மை வாய்ந்தது, எனவே, மத் திய அரசின் அவசரத் தலையீடு தேவைப்படு கிறது.
இவற்றை கருத்தில் கொண்டு, வரவிருக்கும்
பார்லிமென்ட் மழைக் கால கூட்டத்தொடரில், பொருத்தமான அவசர சட்டம் அல்லது சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து, பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவார ணம் வழங்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்ப ளித்து, அரசு இவ்விஷ யத்தில் இரக்கத்துடனும், உறுதியுடனும் செயல் படும் என்று உறுதியாக நம்புகிறோம். பாதிக்கப் பட்ட லட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கு உரிய நேரத்தில் நிவாரணம் -வழங்கப்படாவிட்டால், அவர்கள் தங்கள் உரிமை களையும் வாழ்வாதாரங் களையும் பாதுகாப்பதற் காக ஜனநாயக மற்றும் அமைதியான போராட் டங்களில் ஈடுபட நிர்பந் திக்கப்படலாம். அரசின் முன்முயற்சியான தலை யீட்டின் மூலம் அத்த கைய சூழ்நிலையைத் தவிர்க்க முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
This newspaper clipping reports on teachers' dissatisfaction with a court ruling regarding the Teachers Eligibility Test (TET).
Teachers are urging the central government to enact an emergency ordinance to address the implications of the ruling.
The article mentions concerns about the job security of teachers who have worked for many years without proper regularization, particularly those in rural or underprivileged areas.
Monday, June 1, 2026
New
TET மீதான தீர்ப்பால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி - மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர கோரிக்கை
TNTET 2025
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.